பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



7

அழிந்து வந்த ஆர்க்காடு ஆட்சி

யர்விற்கு உதவும் உத்தமர்களை எத்திவிடும் எத்தர்களாக விளங்கினர் வெள்ளைப்பாங்கிகள். வியாபாரத்திற்காகத் தமிழ்நாட்டிற்கு வந்து, சென்னைக் கடற்கரையில் கிட்டங்கியும் கோட்டையும் அமைத்து, ஆர்க்காட்டு நவாப்பின் தோழமையையும் தாராள மனப்பான்மையையும் சாதகமாக்கிக் கொண்டனர். நவாப்பின் எதிரிகளை அடக்குவதற்கு முன் வந்த அவர்கள், நாளடைவில் தங்களது நயவஞ்சகச் சூழ்ச்சிகளிலும், சதிகளிலும் நவாப் முகம்மது அலியைச் சிக்கவைத்து, நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக, அவரைத் தங்களுக்குப் பயன் அளிக்கும் பகடையாக அரசியல் களத்தில் பயன்படுத்தினர். தமது வலையில் சிக்கிய இரையை சிறுகச் சிறுகச் சிதைத்து உண்ணும் சிலந்திப் பூச்சியைப் போன்று, அவரை ஈடுசெய்யாத பெருங்கடனாளியாக்கி, அவரது உரிமைகளையும் உடமைகளையும் கொள்ளை கொண்டனர். ஆதாயத்தை மட்டும் எடுத்துக்கொண்டு, செலவு அனைத்தையும் நவாப் முகம்மது அலியின் தலையில் கட்டி, வசூலித்தனர். இந்தப் பகற் கொள்ளையைத் தடுக்க முடியாத நவாப் முகம்மது அலி, கடனாலும், எதிர்நடவடிக்கை எதுவும் எடுக்க முடியாத கவலையினா லும், இயலாத்தன்மையினாலும் நைந்து நலிந்து கி.பி. 1795ல் இறந்தார்.[1]

அடுத்து நவாப் பதவிக்கு வந்த நவாப் உம்தத்துல் உம் ராவைப் பயமுறுத்தி காலாவதியாக விருக்கும் 1792ம் வருட உடன் பாட்டைத் திருத்தி நீடித்துக் கொள்ள முயன்றனர். இதற்கு ஆயுதமாக இறந்துபோன நவாப் முகம்மதுஅலி மீது ஒரு பெரிய பழியையும், சுமத்தினர். அவர்களுடன் நண்பராக இருந்த நவாப் முகம்மது அலி. அவர்களது பொது எதிரியான மைசூர் மன்னர் திப்புசுல்தானிடம் ரகசிய கடித தொடர்பு கொண்டு


  1. 1 Rajayyan Dr. K. History of Madurai (1974) p. 324