இருந்தார் என்பது,[1] ஆதாரமற்ற இந்தப் புகார் பற்றி நடுவர் விசாரணை நடத்துமாறு நவாப் உம்தத்துல் உம்ரா கோரினார். ஆனால் பரங்கிகள் அதற்கு ஆயத்தமாக இல்லை. கும்பெனியாரது தலைமை இரண்டு நடுவர்களைக் கொண்ட குழு சென்னையிலும், பரீரங்கப்பட்டினத்திலும் உள்ள முக்கியமான பரங்கிகளை விசாரிக்கச் செய்தது. ஆனால் அவர்கள் எதிர்பார்த்தபடி நவாப்பினதும் மைசூர் மன்னருடையதுமான கடித வாசகங்களில் இரசிய செய்திகள் எதுவும் இல்லை என்பதைத் தெரிந்து குழு அறிக்கை கொடுத்தது. ஆனால் கும்பெனி தலைமை இந்த நடுவர் அறிக்கையை எற்றுக் கொள்ளவில்லை. ஆனால் நவாப்பின் ஆட்சேபனைகளுக்கு மாற்றமாக கி.பி 1792ம் ஆண்டு உடன்படிக்கைப்படி நெல்லை, மதுரை-மறவர்-திருச்சி-வடஆற்காடு, நெல்லூர், பழனி ஒங்கோல் சீமைகளை நவாப்பிடம் ஒப்படைக்காமல் அவர்களே தொடர்ந்து அங்கு தங்கள் நிர்வாகத்தை நடத்தி வந்தனர். [2]நவாப்பினது ஒப்புதல் இல்லாமலேயே, மறவர் சீமையின் ஆட்சியிலிருந்து நீக்கப்பட்ட மன்னர் முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதிக்கு அவரது பெண்மகள் வாரிசு இருக்கும் பொழுதே கையூட்டுப் பெற்றுக் கொண்டு, அந்த மன்னரது தமக்கை மங்களேசுவரி நாச்சியாரை சேது மன்னரது வாரிசாக ஏற்றுக் கொண்டனர். [3]நோயினால் நலிவுற்று இருந்த நவாப்பினது தந்தை பலவீனமான நிலையைப் புரிந்து கொண்டு கும்பெனியார் நவாப்பினது தந்தை வாலாஜா முகமது அலி காலத்தில் இருந்து குதிரைப்படை செலவு கணக்கில் 11, 62, 770 பக்கோடா பணம் பற்றாக இருப்பதாகவும் அதனை நேர் செய்வதற்கு ஏற்பாடு செய்தால் திப்பு சுல்தான்மீது தொடுக்கவிருக்கும் நான்காவது மைசூர் போரினால் நவாப்பும் ஆதாயம் பெறலாம் என வற்புறுத்தினர்.[4] பரங்கியரது இந்த பேராசைக் கோரிக்கை நவாப்பிற்கு அதிர்ச்சியை அளித்தது. ஏனெனில், இத்தகையதொரு கடன்பாக்கி பற்றி இதுவரை எந்தவித குறிப்பும் கிடையாது. கி.பி. 1749 முதல் கி. பி. 1792 வரை ஆர்க்காடு நவாப்பிற்காக பரங்கி
பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/110
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
