பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

93

அவர் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்னர் இவர் கும்பெனியாரது தலைமைக் கொள்ளைக்காரரான கிளைவுக்கு எழுதிய கடிதம்.

".... பீதியடைந்த மான் அபாயத்தை அறிந்தவுடன் தனது வலுவையெல்லாம் சேர்த்து பாய்ந்து பறந்து யாருபுக முடியாத புதர் நிறைந்த காட்டிற்குள் மறைந்து விடுகிறது. ஆனல் எனக்கு அத்தகைய புகலிடம் எதுவும் இல்லை. எதிரிக்கு முன்னால், என்னைத் தற்காத்துக் கொள்ள முடியும் அல்லது அவ னது தாக்குதலில் இருந்து தப்பித்து விடமுடியும். ஆனால், நீண்ட கால நட்பின் படைபலம் எனக்கு முன்னே நெருங்கி நிற்கிறது. என்மீது அழிவு அம்புகளைச் சொரிகிறது ... ... எனது நம்பிக்கைகள் நசிந்து விட்டன. மகிழ்ச்சிக்கான அறிகுறி கண்ணுக்கெட்டிய தூரத்தில் தென்படவில்லை. ரோஜா மலரின் இதழ்கள் அனைத்தும் உதிர்ந்து விழுந்துவிட்டன. எனது கையில் அந்த மலரின் முட்கள் மிகுந்த காம்பு மட்டும் உள்ளது. ... ...[1]

பச்சைத் தூரோகிகளான பரங்கிகளது பயங்கரமான சதித் திட்டத்தினால் பாந்தள் வாய்ப்பட்ட தவளை போலத் துடித்துக் கொண்டிருந்த நவாப்பின் நெஞ்சத்தில் இருந்து கசிந்த இரத்தக் கண்ணீரில் எழுதப்பட்டு இருந்தது இந்தக்கடிதம்.

ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி கர்நாடக அரசியல் அதிகாரங்களை முழுமையாகப் அவரிடமிருந்து பறிப்பதற்கு பரங்கிகள் முயன்றனர். நவாப்பின் முத்த மகன் அலிஹாலைன், தங்களுக்கு இணக்கமாக அல்லாமல் எதிரிடையாக இருக்கிறார் என்பதை அறிந்தவுடன் அவரை நவாப்பாக ஏற்றுக் கொள்ளாமல் அவரது ஒன்றிவிட்ட சகோதரர் ஆஜிம்-உத்-தெளலாவை எவ்வித அதிகாரமோ அரசோ இல்லாத 'பொம்மை நவாப்பாக அங்கீகரித்து 31-7-1801ல் அவரை கர்நாடக நவாப்பாக்கி நாடகமாடினர். அத்துடன் அந்த ஆரவாரம் அடங்குவதற்குள்ளாக யாரும் சந்தேகப் படாதநிலையில் உண்மையான நவாப்பான அலி ஹாபஸ்னை விஷமிட்டுக் கொன்று போட்டனர்."[2] கும்பெனியார் எப்பொழுதும் கையாளும் கோரமான தந்திரம் அது.


  1. 9 Military Consultations vol 268 (10-5-1800) pp. 2996-3025
  2. 10 Secret Despatches to England vol. 2, (3-8-1801), pp. 9290