பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

பொம்மை நவாப் அஜிம் உத்தெளலாவுடன் கும்பெனியார் செய்து கொண்ட உடன்படிக்கையின்படி[1] நவாப் அவரது பொது ராணுவ அலுவலர்கள் அனைவரும் அவர்களது நிர்வாகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் உடனே கும்பெனியாருக்கு நிரந்தரமாக கையளித்து விடவேண்டும். அத்துடன் அந்த அலுவலர்கள் பொறுப்பில் உள்ள அனைத்து ஆவணங்கள், கணக்குகள் ஆகியவற்றையும் கும்பெனியாரிடம் ஒப்படைத்துவிட வேண்டும். கர்நாடகப் பகுதி முழுவதில் இருந்தும் வரக்கூடிய வருடத்தீர்வையில் ஐந்தில் ஒரு பகுதியை மட்டும் பெறுவதற்கு நவாப் அருகதை உள்ளவர் ஆகிறார். அதாவது ஆண்டு ஒன்றுக்குக் கிடைக்கும் வருமானம் சுமார் முப்பத்து இரண்டு லட்சம் ஸ்டார் பக்கோடா பணம் வருவாயில், மாதம் 12,000/- ஸ்டார் பக்கோடா பணம் நவாப்பின் பராமரிப்பு செலவிற்கு ஒதுக்கப்படும். வடக்கே விஜய நகரத்தில் இருந்து தெற்கே களக்காடு வரை நீண்டு பரந்த கர்நாடகத்திற்கு அரசுரிமை கொண்டாடி வந்த ஆற்காட்டு நவாப்பிற்கு இப்பொழுது அரசுரிமையும் கிடையாது. நல்லவேளை வாழ் வதற்காவது உரிமை வழங்கியிருக்கிறார்களே. திருச்சிராப்பள்ளியில் இருந்த மாளிகையை மட்டும் அவரது சொந்த சொத்தாக” விட்டுக் கொடுத்தனர். 'தர்மத்திற்கும் நியாயத்திற்கும்" பெயர் போன ஆங்கிலேயர், நவாப் உயிர் வாழ்வதற்கு மாதம் ஊதியம் கொடுத்து வருவதே பெரிய காரியம் அல்லவா? ஆயிரக்கணக்கான படைவீரர்களைக் கொண்ட ராணுவ அணிகளைப் பராமரித்து வந்த நவாப் இனிமேல் ஆங்கிலேயரது ஒப்புதலின் பேரில் தான் தனது சொந்த கெளரவத்திற்கு ஏற்ற எண்ணிக்கையில் பணியாட்களை அமர்த்திக் கொள்ள வேண்டும். மேலும், கும்பெனியாருக்குத் தகவல் இல்லாமல் உள்நாட்டிலோ வேறு நாட்டிலோ உள்ள அரசுடன் நவாப் கடிதப் போக்குவரத்து வைத்துக் கொள்ளக் கூடாது.

இவை அஜீம் உத்தெளலா," ஆற்காட்டு நவாப்பாக" குறிக்கப்படுவதற்கு ஒப்புக் கொண்ட நிபந்தனைகள் அல்ல, கும்பெனியாரது அடிமையாக வாழ்வதற்கு அாசியலில் ஆட்சி முறையில் இருந்து துறவு கொள்வதற்கு அவர் அணிந்து கொண்ட புத்தாடைகள், அத்துடன் வியாபாரிகளாக இந்த நாட்டிற்கு


  1. 11 Secret Consultations vo1, 13. (31-7-1801) pp. 786-801