பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

95

வந்த பரங்கிகளது ஏகாதிபத்திய ஆட்சிமுறை, தமிழ் மண்ணில் எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் நடைபெறுவதற்கு காண்பிக்கப்பட்ட பச்சைக் கொடி, அந்த உடன்பாடு.

ஆர்க்காட்டு நவாப்பின் கடைசி வாரிசுதாரருக்கும், கும்பெனியாருக்கும் 31-7-1801 ல் ஏற்பட்ட உடன்பாடு தமிழக அரசியலில் கும்பெனியாரது தங்கு தடையற்ற அதிகார நிலையை வலுப்படுத்தியது. என்றாலும் அவர்களது எகாதிபத்திய உரி அதர்மமான முறையில் தமிழகத்தை ஆக்கிரமித்துள்ள - அக்கிரமத்தைத் துணிந்து கேட்பதற்கு அப்பொழுது தமிழகத்தில் யாருமே இல்லாத நிலையில், சிறிதும் அஞ்சாமல், அவர்களது ஆதிபத்திய ஆசைகளுக்கு ஆயுதப்பலத்திற்கு சவால்விடும் வகை யில், இராமநாதபுரம் - சிவகங்கை மண்ணில் மட்டும் தான் கிளாச்சிகள் சிறிதும் தயக்கமில்லாமல், தொடர்ந்து நடந்தன. 21-8-1799 ல் அன்னிய ஆதிக்கவாசிகளுக்கு எதிராக ஆயுதம் தாங்கிய மக்கள் கிளர்ந்து எழுந்த முதுகுளத்தூர் பகுதியில், மயிலப்பர் சேர்வைக்காரரது தலைமையிலான கிளர்ச்சிக்கு மீண்டும் பேராதரவு தவிர்த்தது. முத்து இருளப்ப சேர்வைக்காரரும் அவரது குழுவினரும் அங்குள்ள கும்பெனியாரது சொத்துக்களைக் கொள்ளையடிக்க முயன்றனர். பீதியடைந்த முதுகுளத்து கலெக்டருக்கு இராணுவ உதவி கோரி அபாய அறிவிப்பு செய்தார்.[1]

மயிலப்பன் சேர்வைக்காார் முதுகுளத்துர் வந்து சேர்ந்தவுடன் கொச்சிக்காயர்களது மகிழ்ச்சி எல்லையற்று பொங்கியது. முன் விலையில் முதுகுளத்துர் கச்சேரிக்குத் தீயிட்டனர் . கும்பெனியாருக்கு இந்தத் தீயினால் பெருஞ்சேதம் ஏற்பட்டது.[2] கிளாச்சிக்காரர்களது ஒரு பிரிவினருடன் மயிலப்பன் சேர்வைக் கார் ஆப்பனுருக்கு புறப்பட்டுச் சென்றார். மேலும் அதே நோத்தில் மறவர் சீமையின் ஏனைய பகுதிகளான பரமக்குடி, பார்த்திபனூர், உளக்குடி, நயினார்கோவில் ஆகிய ஊர்களில் அறுவடைக்கு நின்று கொண்டிருந்த பயிர்களை கிளர்ச்சிக்காரர்கள் அழித்து, கும்பெனியாருக்கு அவைகளில் இருந்து கிடைக்க


  1. 12 Madurai District Records vol. 1182, (14-6-1801) p. 182.
  2. 13 Ibid, (4-7-1801) p. 227.