பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96

வேண்டிய 'கிஸ்தி' கிடைக்காதவாறு செய்தனர்.[1] மயிலப்பன் சேர்வைக்காரரும் அவர் சென்ற ஊர்களில் உள்ள குடிமக்கள் அனைவரையும் கும்பெனியாரது அக்கிரமமான ஆக்கிரமிப்பையும் ஆயுதபலத்தையும் எதிர்த்துப் போராடி பிறந்த மண்னின் மானத்தைக் காப்பதற்காகக் கிளர்ந்து எழும்படி தூண்டி வந்தார்.[2] பல்வேறு வகையான மக்களும் கிளர்ந்து எழுந்து போராடினால் பரங்கிகளை அழித்து ஒழித்துவிட முடியும், இவ்விதம் செய்யாதவரை அவர்களுக்குப் பணிந்து செல்லும் வகையில், அவர்கள் எதையும் செய்வார்கள் என்ற கருத்து மக்களிடம் பரவலாகப் பரவியது.[3]


  1. 14 Madurai District Records, vol. 1182 (3-7-1801) p. 223.
  2. 15 Ibid, (12-7-1801) p. 241.
  3. 16 Revenue Sundries, vol. 26, pp. 447-55.