பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

99

தனர். [1]கர்னர் அக்கினியூவின் போர் உத்திகளும் விரைவாகவும் உறுதியாகவும் செயல்பட்ட அவனது அணியின் உழைப்பும், கிளர்ச்சிக்காரர்களுக்குப் பெருத்த நாசத்தை ஏற்படுத்திவிட்டது. சிவகங்கைச்சீமைப் போரில் ஒரு புதிய திருப்பத்தைப் பரங்கியரின் இந்தவெற்றி சுட்டியது அத்துடன் கர்னல் அக்கினியூ மாற்றாரது வலிமையைத் தெரிந்து செயல்படுவதற்கும் இந்தப் போர் வாய்ப்பாக இருந்தது.

அடுத்து, கர்னல் அக்கினியூவின் தலைமையிலான கும்பெனிப் படைகள் சிவகங்கை நோக்கிப் புறப்பட்டன. வழியில் அவர்களைத் தாக்கிய கிளர்ச்சிக்காரர்கள் அணியைப் புறமுதுகிடச் செய்து விட்டு சிவகங்கைக்கு ஏழுகல் தொலைவில் உள்ள ஒக்கூரைப் பிடித்தான். பரந்தவெளியில் பாசறையை அமைத்தான். கிளர்ச்சிக்காரர்களது உயிர்நிலை போல அப்பொழுது விளங்கிய அரண்மனை சிறு வயலையும் காளையார்கோவில் கோட்டையையும் தாக்குவதற்குரிய திட்டத்தை வரைவதில் அங்கு ஈடுபட்டான். மூன்று நாட்களில் சின்னமருது சேர்வைக்காரரது அரண்மனை சிறுவயலில் கும்பெனிப்படைகள் நின்றன. கர்னல் அக்கினியூ. கர்னல் இன்ஸிக்கும், மேஜர் ஷெப்பர்டுக்கும் தாக்குதல் பற்றிய உத்திகளை விளக்கிக் கூறினான். அப்பொழுது அவர்கள் அரண்மனை சிறு வயல் கிராமத்திற்கு முன்னதாக பீரங்கி குண்டு போய் விழும் தொலைவில் நின்றனர்.

கும்பெனிப்படைகளை எதிர்பார்த்த கிளர்ச்சிக்காரர்கள் அரண்மனை சிறுவயல் கிராமத்திற்கு வடக்கே இரண்டுகல் தொலைவில் உள்ள பனங்காடு, புதர்கள், கண்மாய்க்கரைகளில் வசதியாக நிலைகொண்டு இருந்தனர். சரமாரியாக துப்பாக்கிக் குண்டு களைச்சுட்டு எதிரிகளது முன்னேற்றத்தைத் தடுக்க முயன்றனர். ஆனால் முன்னோடி அணியை நடத்திச்சென்ற மேஜர் ஷெப்பர்டு துப்பாக்கி குண்டுகளைப்பற்றி கவலைப்படாமல் மிகுந்த துணிச்சலுடன் முன்னேறினான். கிளர்ச்சிக்காரர்கள். தங்கள் துப்பாக்கியில் அடுத்த குண்டை வைத்து அழுத்தி சுடுவதற்கு கூட அவகாசம் தராமல், கண்மாய்க்கரை, பனங்காடு, முட்புதர், இவ்விதம் ஒன்றையடுத்து, ஒன்றாக மறைந்து சுட்ட கிளர்ச்சிக்காரர்கள்


  1. 3 Military Consultations vol. 286, (4-8-1801) pp. 5348-49