பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102

கள் நாட்டார் எனவும் வழங்கப்பட்டனர். இவர்களில் கீழ் நாட்டுக் கள்ளர்கள், எப்பொழுதும் எந்த அரசுக்கும் கட்டுப்பட்டவர்களாக இருக்கவில்லை. முன்னுறு ஆண்டுகாலம் தொடர்ந்து மதுரை நாயக்கர் மன்னர் ஆட்சியில் கூட அவர்கள் கட்டுப்படாமல் மதுரை நாயக்க மன்னர்களுக்கு பல இடையூறுகளை ஏற்படுத்தி வந்தனர். ஆற்காடு நவாப்பின் பிரதியாக மதுரையில் நிர்வாகம் நடத்திய கம்மந்துான்கான் சாகிபு தான் இந்த சமூகத்தினரை மிகவும் பயங்கரமாக அடக்கி ஒடுக்கி, அவர்களும், ஏனைய குடிமக்களைப் போன்று கண்ணியமான வாழ்க்கை நடத்துமாறு செய்தார். அவரது மறைவிற்குப் பிறகு மீண்டும் அந்த சமூகத்தினரின் செயல் முறைகள் மோசமாகிவிட்டன. சிவகங்கைப் பிரதானிகளாக பணியேற்ற மருது சேர்வைக்காரர்கள் தங்களது அண்டை நாட்டவர்கள் என்ற முறையிலும், தாங்கள் சார்ந்துள்ள முக்குலத்தின் மற்றொரு பிரிவினர் என்ற முறையிலும் மேலுரர் நாட்டுக் கள்ளர்களுடன் பொதுவாக தொடர்புகளைக் கொண்டிருந்தனர். அவர்களது தலைவர்களை சிவகங்கைக்கு வரவழைத்து பொன்னும், மணியும் வழங்கி சிறப்பித்தார். குறிப்பாக – காரிப்பட்டி, குனிய முத்துார் கள்ளர் தலைவர்கள் சிவகங்கைக்கு அடிக்கடி வருகை தந்து மருதுசேர்வைக்காரர்களது பிரதான விருந்தினராக விளங்கினர்.[1]


இந்தச் சூழ்நிலையில், அவர்களைத் தங்கள் அணிக்கு இழுப்பதற்கான முயற்சிகளில் பரங்கிகள் முனைந்தனர், சீமான் வீட்டைக் கொள்ளையிடச் செல்லும் திருட்டுக் கூட்டம், முதலில் சீமான் வீட்டுவாசலின் உள்ள நாயின் வாயைக் கட்டிவிடுவது வழக்கம். அதைப் போன்றதுதான் கொள்ளைக் கூட்டவான பரங்கியரது நடவடிக்கைகளும் சிவகங்கைச் சேர்வைக்காரர்களது செல்வாக்கை மடக்கி, பலவழிகளிலும் அவர்களை அடக்கி ஒடுக்குவதற்கு பரங்கியர் முனைந்து செயல்பட்டனர். அவைகளில் ஒன்று, சிவகங்கைச் சீமையின் வடக்கிலும், வடமேற்கு எல்லையில் அமைந்து இருந்த கள்ளர்நாட்டுத் தலைவர்களை தங்களுக்கே உரிய ராஜதந்திர சூழ்ச்சிகளைக் கையாண்டு அவர்களது நட்பு நிலையில் மாற்றத்தை உருவாக்கினர். கும்பெனித்தளபதி காரோல் தலைமை இடத்திற்கு அனுப்பிய கடிதம் கள்ளர்நிலை


  1. Madurai District Records vol. 1134, (29-5-1801).