பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104

தம்மாலான எல்லா உதவிகளையும் வழங்குவதற்கு எப்பொழு தும் தயராக இருப்பதாக வாக்குறுதியும் வழங்கினார்.[1]

பாஞ்சாலங்குறிச்சிப் போரில் கும்பெனியாரிடம் தோல்வியுற்று உயிர்தப்பி, தமது சீமைக்காட்டில் தஞ்சம் புகுந்த கட்ட பொம்மு நாயக்கரைப் பிடித்துக் கொடுத்து, ஆங்கிலேயரிடம் கைக்கூலி பெற்றவர் புதுக்கோட்டைத் தொண்டமான். கைக்கூலி ரூபாய் பத்தாயிரமும், பட்டாடைகளும், அரபிக் குதிரையையும்,[2] அழகிய வாளையும், பரிசாக சென்னை கவர்னரிடமிருந்து அவர் பெற்று ஓராண்டுதான் ஆகி இருந்தது. “கும்பெனியாருக்குத் தேவைப்படும் எந்த சந்தர்ப்பத்திலும் தம்மை அர்ப்பணித்து நல்ல பெயர் சம்பாதிக்க வேண்டும் என்பதே இறைவனது சன்னிநிதானத்தில் தமது பிரார்த்தனை”[3] என ஏற்கனவே கும்பெனியாருக்கு தெரிவித்து இருந்த “தொண்டு உள்ளம் கொண்ட சீமான்” அல்லவா இந்த தொண்டமான்? அதற்கான வாய்ப்பு இப்பொழுது வந்து இருப்பதை நழுவ விடுவாரா என்ன?

தமது திருமணவிழா சம்பந்தமான நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு இருந்த அவர் பிளாக்பர்னது கோரிக்கையை நிறைவு செய்வதையே பெரிதாக எண்ணி அதில் கண்ணுங்கருத்துமாகக் இருந்தார். உடனடியாகத் தமது தளபதி முத்துக்குமாருபிள்ளை தலைமையில் மூவாயிரம் கள்ளர்களை நத்தத்தில் நிலைகொண்டிருந்த இன்னிஸிடம் அனுப்பிவைத்தார்.[4] திருமெய்யத்தில் உள்ள தமது கோட்டையை கும்பெனியர் தாராளமாக பயன்படுத்திக் கொள்வதற்கும் அனுமதித்தார். போர்த்தளவாடங்களைச் சேகரித்து வைத்துக் கொள்வதற்குள், சிவகங்கைச் சீமை கிளர்ச்சிக் காரர்களையும் அவர்களது சுற்றத்தாரையும் சிறையில் இட்டு


  1. Military Consultations. vo1 - 85 A, (24-6-1801) p 5006 5010-13.
  2. Rajayyan Dr. K. History of Madurai (1974) p. 366,
  3. Board of Revenue Consultations, vol. 235, (14-9-1799) р. 8067.
  4. Military Consultations, vol. 285 (A) 22-6-1801 p.p. 5024-26.