பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

105

சித்திரவதை செய்வதற்கும் இந்தக்கோட்டையை பின்னால் பரங்கிகள் பயன்படுத்தினர்.[1]

அதே சமயத்தில், திருநெல்வேலியில் இருந்த மேஜர் மக்காலேயை எட்டையாபுரம் பாளையக்காரரிடம் அனுப்பி கும்பெனி யாருக்கு விசுவாசமாக நடந்து கொள்ளுமாறும் எந்தக் காரணத்தைக் கொண்டும் சிவகங்கைப் பிரதானிகளுடன் எவ்வித தொடர்புகளும் வைத்துக் கொள்ளக்கூடாது எனவும் எச்சரித்தனர்.[2] மொத்தத்தில், சிவகங்கைச் சீமையைச் சுற்றிலும் உள்ள பாளை யக்காரர்களிடமிருந்து சிவகங்கைப் பிரதானிகள் உதவி பெறுவதைத் தடுக்கும் தங்களது முதல் கட்ட திட்டத்தை கும்பெனியார் இவ்விதம் நிறைவேற்றினர். ஆனால் சிவகங்கைச் சேர்வைக்காரர்கள் இவைகளையெல்லாம் தெரிந்து கொள்ளாமல் இல்லை. தங்களது கிளர்ச்சியையும் கைவிடவில்லை. மாறாக, மிகுந்த ஆரிவத்துடன் தங்களது பரங்கி எதிர்ப்புப் போரைத் தொடர்ந்து வந்தனர் .

ஏற்கனவே அவர்கள் மதுரைச் சீமையின் மேற்குப்பகுதியைப் பிடித்து வைத்து இருந்தனர். இன்னொரு பகுதியான பாவளியை இப்பொழுது கைப்பற்றினர். மேலும், திருமோகூர் கோட்டை எற்கனவே இவர்கள் கைகளில் இருந்ததால் கிளர்ச்சிக்காரர்கள் அடுத்து மதுரையைப் பிடிக்க முயன்றனர். ஊமைத்துரையின் தலைமையில் ஒரு அணி மதுரைக் கோட்டையைப் பிடிப்பதற்குச் சென்றது. ஆனால் மிகுந்த பாதுகாப்புடன் பரங்கியர் அங்கு இருந்ததால், கிளர்ச்சிக்காரர்கள் சிவகங்கைக்குத் திரும்பினர்.[3] இன்னொரு அணி - இரண்டாயிரம் பேர்களுடன், சின்ன மருது சேர்வைக்காரர் மகன் சிவத்த தம்பி தலைமையில், தொண்டி வழியாக வடக்கு நோக்கி சோழச்சீமைக்குள் சென்றது. பொன் பத்தி, அறந்தாங்கி, அதிரைக்குடி, பட்டுக்கோட்டை மாங்குடி ஆகிய ஊர்களைக் கடந்து நாகூர் சென்றது.[4] வழி நெடுகிலும்


  1. Ibid (24-6-1801) pp. 5030-32.
  2. Board of Revenue Consultations-vol. 235, (14-9-1799) р. 806.
  3. Military Consultations vol. 285 (A) (7-7-1801), р. 5051-52.
  4. Military Consultations vol. 296 (4-8-1801) p. 5380