பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110

வேட்டையாடிப் பிடித்த நூறு குடும்பத்தினர் பற்றிய விவரத்தை தொண்டமான் கலெக்டருக்கு அனுப்பிவைத்தான்.[1] அவர்கள் அனைவரும் திருமயம் கோட்டையில் சிறைவைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டனர்.

ராஜசிங்கமங்கலம், அறுநூற்றி மங்கலம், திருவாடனை, ஓரியூர் ஆகிய இடங்களுக்குக் கூலிப்படை அனுப்பப்பட்டு கிளர்ச்சிக்காரர்கள் மீது நெருக்குதலை ஏற்படுத்தினர்.[2] ராஜசிங்கமங்கலம் நாட்டில் இத்தகைய நடவடிக்கைகளினால் வன்முறை தலைவிரித்து ஆடியது. கிளர்ச்சிக்காரர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். கிளர்ச்சியின் வேகம் குலைக்கப்பட்டது.[3] கிளர்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டு மக்களை ஊக்குவித்து வந்த வீர இளைஞன் குமாரத்தேவனும் அவனுடைய மூன்று தோழர்களும் பிடிக்கப்பட்டு இரும்புச் சங்கிலியில் பிணைத்து வைக்கப்பட்டனர். தூக்க இயலாத அந்தச் சங்கிலியின் பளுவினால் அந்த இளைஞர்களது உடல் துவண்டு வாடியது. காட்டு மிராண்டித்தனமான இந்த அடக்கு முறைகளுக்கு உடந்தையாக, உதவியாக வன்னியத்தேவன் என்ற துரோகி இருந்து வந்தான்.[4]

குமாரத்தேவனையும் அவனது தோழர்களையும் “நீதி” விசாரணை செய்து தண்டனை வழங்க ஒரு குழுவை கும்பெனியார் நியமனம் செய்தனர். கர்னல் மார்ட்டின்ஸ், தாமஸ்கிரீன், பாரிஸ் என்ற பரங்கிகள் தான் அந்தக் குழுவினர்.[5] குற்றம் சாட்டுபவர்களும், குற்றங்களுக்காக நியாய விசாரணை நடத்தி, தண்டனை வழங்குபவர்களும் கும்பெனியார் நியாயம் எங்கே இருக்கிறது? இந்தக் குமாரத்தேவன் ராஜசிங்கமங்கலம் பகுதியில் கும்பெனியாரது ஆதிக்க வெறிக்கு எதிராகக் கிளர்ச்சிக்களை நடத்திய மாவீரன் என்ற விவரம் மட்டும் தெரிகிறது. அவனது நாட்டுப் பற்றுமிக்க நடவடிக்கைகளை விவரமாகத் தெரிந்து கொள்ள உதவும் ஆவணம் எதுவும் கிடைக்கவில்லை என்பது வேதனைக்குரி


  1. Ibid p. 6959
  2. Ibid p. 6967
  3. Madurai District Records, vol 219 (20-9-1801) (24-9-1801)
  4. Ibid vol. 1134, (20-9-1801)
  5. Revenue Sundries. vol. 26, (20-9-1801)