பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

115


ஆகஸ்டு - இரண்டாம் நாள்

அதே அணி இன்று நூற்று ஐம்பது வீரர்களுடன் காட்டிற்குள் நுழைந்தவுடன், கிளர்ச்சிக்காரர்கள் அவர்களை துப்பாக்கியால் பயங்கரமாகச் சுட்டனர். மிகவும் பீதியடைந்தவர்களாக, மலாயா நாட்டு வீரர்கள், அணியின் தலைமையில் இருந்து நழுவி, அணியின் மத்தியில் உள்ள பரங்கிகளிடம் ஓடி வந்தனர். அவர்களினாலும் கிளர்ச்சிக்காரர்களது தாக்குதலைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. இரண்டு மலேயா வீரர்கள் அப்பொழுது மடிந்தனர். அணியின் இன்னொரு பகுதியில் இருந்த பிரெஞ்சு நாட்டு அலுவலரான என்சைன் கெளபில் அப்பொழுது கிளர்ச்சிக்காரர்களால் தாக்கப்பட்டார். அவரது அணியினர் கிளர்ச்சிக்காரர்களை மிகுந்த தீரத்துடன் சமாளித்தும் கூட அவர்கள் கிளர்ச்சிக்காரர்களால், விரட்டி அடிக்கப்பட்டனர். என்சைன், இரு வேல்கள் தாக்கிய காயத்துடன், உடைகள் கிழிந்தவராக உயிர் தப்பி ஓடி வந்தார். அவருடன் இருந்த மலேயா தளபதி ஒருவரும் மற்ற இரு வீரர்களும் கிளர்ச்சிக்காரர்களிடமிருந்து ஆச்சரியப்படத்தக்க வகையில் உயிர் தப்பினர்... ... ... நாள் முழுவதும் அவர்களது தாக்குதலைச் சமாளிக்க வேண்டியதாக இருந்தது, எதிரிகளில் மூவர் கொல்லப்பட்டனர். உற்சாகத்துடன் முன்னேறிய சிலர் கொல்லப்பட்டனர். மலேயா வீரர்கள் மூவர் படுகாயமடைந்து பிற்பகல் மூன்று மணிக்கு பாசறை திரும்பினர். அறு நூறு கெஜதூரம் வரை அன்று காடு அழிக்கப்பட்டது.

ஆகஸ்டு - மூன்றாவது நாள்

ஆறுபவுண்டர் பீரங்கிகள் நான்குடன் கர்னல் டால்ரிம்பிள் தலைமையில் அணி புறப்பட்டது. வழியில் கிளர்ச்சிக்காரர்கள் தடுப்புக்கள் ஏற்படுத்தி வைத்து, சிறிய பீரங்கி ஒன்றினை நிறுத்தி வைத்து இருந்தனர். நமது பீரங்கிகள் படபடத்தவுடன் எதிரிகள் தங்களது பீரங்கியுடன் காட்டிற்குள் மறைந்து விட்டனர். தடுப்புகள் அகற்றப்பட்டன. என்றாலும் அவர்கள் நாள் முழுவதும் நம்மை நோக்கி சுட்டவாறு இருந்தனர். நமது அணியில் இருவர் மட்டும் பலத்த காயமடைந்தனர். நானூற்று முப்பது கஜ தூரம் பாதையை வெட்டிய பிறகு, நான்குமணிக்கு நமது அணி திரும்பியது. இன்றைய மோதலில் நெருக்கமாக காட்டை ஊடுருவுதலுக்கு துப்பாக்கியைவிட பீரங்கியை பயன்படுத்துவது சிறப்பாகத்