பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118


ஆகஸ்டு - ஒன்பதாவது நாள்

இன்று மேஜர் ஷெப்பர்டு தலைமையில் அணி புறப்பட்டது. தனது போர் உத்திகளை மாற்றியவராக வேலை செய்ய வேண்டிய பகுதியில். ஒரே சமயத்தில் தமது பீரங்கிகளும் துப்பாக்கிகளும் வெடிக்குமாறு செய்தார். இதனால் ஆள் சேதம் இல்லாமல் அந்தப்பகுதியைக் கைப்பற்ற முடிந்தது. நமது முனைப்பான முன்னேற்றத்திற்குத் தடங்கலாக இருந்த அதே கண்மாய்க்கரையைக் கைப்பற்றி, ஒரு இராணுவ நிலையாக மாற்றப்பட்டது. மூன்று பீரங்கிகளும் முன்னூறு வீரர்களும் அங்கு நிறுத்தப்பட்டனர் இந்தப்பணி முடிந்த நிலையில் கர்னல் இன்னிங்ஸ் தலைமையில் இன்னொரு அணி அங்கு வந்து சேர்ந்தது. தெற்கே முப்பது கஜ தூரத்தில் காளையார் கோவிலை நோக்கியவாறு அந்த நிலை இருந்தது. வெட்டிச் சாய்க்க முடியாத மிகப் பெரிய புளிய மரம் ஒன்று நின்றுகொண்டிருந்தது. ஒருபுறம் காளையார் கோவிலும், மறுபுறம் அரண்மனை சிறுவயலும் அங்கிருந்து துலக்கமாகத் தெரிந்தன.

ஆகஸ்டு - பத்தாவது நாள்

கர்னல் இன்னிஸ் தலைமையில் பாதுகாப்பு அணி புறப்பட்டுச் சென்றது. எதிர்ப்பு எதுவும் இல்லாததால் ஐநூறு கெஜ தூரம் வரை காடு வெட்டப்பட்டது. அறந்தாங்கியைக் கைப்பற்ற அனுப்பப்பட்ட கேப்டன் பிளாக்பர்ன் வசதிக்குறைவு காரணமாக இங்கு திரும்பி வருவதாக தகவல் வந்தது. மேஜர் பெர்ஸனும் நூறு பரங்கி சிப்பாய்களும் இருநூறு சுதேசி சிப்பாய்களும் அங்கு பணியில் இருந்தனர்.

ஆகஸ்டு - பதினொன்றாம் நாள்

மேஜர் பெர்லன் தலைமையிலான அணி மிகவும் குறைவான எதிர்ப்பைச் சமாளித்துக் கொண்டு நானூற்று ஐம்பது கஜம் தொலைவு காட்டை வெட்டி பாதை அமைத்தது. பாதையின் முடிவில் இருந்து காளையார்கோவில் கோபுரம் சுமார் ஒன்றரை மைல் தொலைவில் இருப்பது தெரிந்தது.

ஆகஸ்டு - பன்னிரண்டாம் நாள்

லெப்டி. கர்னல் தாலரிம்பிள் தலைமையில் சென்ற பாதுகாப்பு அணிக்கு பலமான எதிர்ப்பு இல்லை. எதிரிகளிடமிருந்து தொடர்ச்சியாக துப்பாக்கிகள் வெடித்ததாலும், நமது அணியின