பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

119

ருக்கு காயம் எதுவும் இல்லை. அத்துடன் தென்கிழக்கில் இருந்து வந்த பெருமழையும் இடியும் சூறாவளிக் காற்றும் அவர்களது தாக்குதலைத் தடுத்து நிறுத்தின. நானூற்று ஐம்பது கஜ தொலைவு காடு வெட்டப்பட்டு நமது அணியினர் திரும்பினர்.

ஆகஸ்டு - பதின்மூன்றாம் நாள்

மேஜர் வெடிப்பர்டு தலைமையில் சென்ற எட்டையாபுரம் வீரர்கள் அணி, வடமேற்காக பதினொரு மைல்கள் சென்ற பொழுது எதிரிகள் அவர்களைத் தாக்கினர். அவர்களில் சிலரைப் பிடித்துச் செல்லவும் முயற்சித்தனர். அன்மையில் உள்ள கண்மாய்க்கரை, முட்புதர்கள் மறைவில் இருந்து கொண்டு நம்மை நோக்கி சுட்டுக் கொண்டு இருந்தனர். குதிரை அணிகளின் பாதுகாப்பில் பரங்கி வீரர்கள் உதவியினால் மேஜர் அவர்களை விரட்டி அடித்தார். அங்கு குதிரைப்படையணி இயங்க இயலாமல் போய்விட்டது. எதிரிகள் நம்மை மட்டும் குறிவைத்து தாக்கினர். அவர்கள் அதிகமான எண்ணிக்கையில் இருந்தாலும், நமதுவீரர்கள் மிகுந்த உற்சாகத்துடன் ஒவ்வொரு தாக்குதலையும் முறியடித்து சமாளித்தனர். நம்மிடமிருந்த சிறப்பான வகையிலான வெடிமருந்தும் இதற்குக் காரணமாகும். எதிரிகளில் குறைந்த அளவு இருநூறு பேர்களாவது கொல்லப்பட்டு அல்லது காயமுற்று இருக்க வேண்டும். வெடித்துக் கொண்டிருந்த நமது பீரங்கிகள் அருகில் வந்து சிறிதும் அச்சமில்லாமல் அவர்கள் போரிட்டனர். ..... மேஜர் மக்லாயிட் தலைமையிலான அணி இருநூற்று ஐம்பது கஜ தொலைவு வரை காட்டை வெட்டி பாதை ஏற்படுத்தியது. அங்கே காடு மிகவும் அடர்த்தியாகவும் மரங்கள் மிகவும் வைரம் பாய்ந்தவையாகவும் இருந்தன.

ஆகஸ்டு - பதினான்காவது நாள்

கர்னல் இன்னிங்ஸ் தலைமையில் சென்ற அணி, இன்று முந்நூற்றி ஐம்பது கஜ தொலைவு வரை காட்டை அழித்து பாதை அமைத்தது. இப்பொழுது காளையார் கோவில் கோபுரம் ஒரு மைல் தொலைவில் தெரிந்தது. இரவு நேரத்தில் எதிரிகளது துப்பாக்கிச்சூடு இருந்தது. ஆனால் நமது தரப்பினருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.

ஆகஸ்டு - பதினைந்தாவது நாள்

பாதையின் முடிவிற்கு இன்று மேஜர் ஷெப்பர்டு தலைமையில் நமது அணியினர் போய்ச் சேர்ந்தவுடன் எதிரிகளது மூன்று