பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120

பீரங்கிகள் நம்மை நோக்கிச் சுட்டன. அவைகள் இருந்த இடம் தெரியவில்லை. அதே நேரத்தில் அவர்களது துப்பாக்கி வெடி, ஜிங்காலி, குண்டுகள் நம்மை இரு புறங்களிலும் பின்புறத்திலும் தாக்கின. அவைகள் குறி தவறி நமது தலைகளுக்கு மேல் சென்றன. சிறிது நேர இடைவெளிக்குப்பிறகு எதிரிகள் நம்மை தாக்குவதற்க்கு ஏற்ற இடத்தைத் தேர்வு செய்தனர், அதனால் காடு வெட்டும் பணியை மேற்கொள்ள முடியவில்லை. அந்தப் பணி தொடருவதற்கு பாதுகாப்பு அளிக்கப் போதுமான வீரர்களும் நமது அணியில் இல்லை. ஆதலால் நமது அணியினரது உயிரைக் காப்பதற்கு எதுவாக, நமது அணியினர் நமது நிலைக்குக் திரும்பிவிட மேஜர் முடிவு செய்தார். நமக்கு வலது புறமாக இருநூறு கஜ தொலைவில் இருந்து அவர்களது பீரங்கிகள் நம்மை நோக்கி குண்டுகளைப் பொழிந்து கொண்டிருந்தன. ஆதலால், உடனே திரும்ப இயலாமல் அவர்களது சுடுதல் ஒய்ந்த பிறகு பிற்பகலில் நமது நிலைக்குத் திரும்பினோம்.

ஆகஸ்டு - பதினாறாவது நாள்

மேஜர் மக்லாயிடு தலைமையில் இரண்டு அணிகளாக பீரங்கி, இல்லாமல், மிகுந்த சிரமத்துடன் முதல் நாள் போர் நடைபெற்ற கண்மாய்க் கரைக்குப் போய்ச் சேர்ந்தோம். அந்த இடம் இயற்கையாகவும் செயற்கையாகவும் நன்கு பலப்படுத்தப்பட்டு இருந்தது. நீண்ட போருக்குப்பிறகு, நமது அணியைச் சேர்ந்த மிகக் குறைவான வீரர்கள் மட்டும் அங்கு முன்னேறிச் செல்ல முடிந்தது. அதுவும் எதிரிகளது மிகக் கடுமையான துப்பாக்கிச் சூட்டிற்கு இடையில், ஆனால் எதிரிகள் இருப்பிடத்தை கண்டு கொள்ள முடியவில்லை.

ஆகஸ்டு - பதினேழாவது நாள்

இன்று இரண்டு அணிகளாகப் புறப்பட்டோம். இரண்டாவது அணியைச்சேர்ந்த நூற்று அறுபது பரங்கிகளும் நானூறு சுதேசி சிப்பாய்களும் சேர்ந்து ஆயிரத்து இருநூறு கஜ தொலைவில் பாதையை வெட்டி அமைத்துவிட்டுத் திரும்பினர். மற்ற அணி சாலையில் இருந்து கொண்டு பீரங்கிக் குண்டுகளை வெடித்துக் கொண்டு இருந்தனர். நம்மிடம் இருந்த குடிநீர் முழுவதும் தீர்ந்து விட்டது என்று தெரிந்தவுடன் அணியை