பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவ சிவ

   தவத்திரு    குன்றக்குடி-623206 
  குன்றக்குடி
  அடிகளார்            23-10-89
          அணிந்துரை
  மாவீரர் மருதுபாண்டியரின் வரலாற்று நூலைப் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது நல்லபேறு. தன் நாட்டின் வரலாற்றை உள்ளவாறு கற்று உய்த்துணரும் ஒருவன் நாட்டின் பெருமைகளை, வளங்களை, மரபுகளைப் பேணிக் காப்பாற்ற முன் வருவான். வரலாறு, கற்கவேண்டிய ஒன்று. வாழ்வுக்கு ஊக்கமும் கிளர்ச்சியும் தருவது வரலாறு.
   நமது நாடு விடுதலை பெற்றது ஒருநாளில் ஏற்பட்ட பரங்கியருடைய ஆதிபத்திய எண்ணத்துறவாலன்று. அடி அடியாகப் போராடியே சுதந்திரத்தை அடைந்திருக்கின்றோம். பாரத நாட்டின் சுதந்திரம், மதிப்பீடு செய்ய இயலாத அளவுக்கு நடந்த போராட்டங்களுக்குப் பிறகு கிடைத்தது என்பதை மருதுபாண்டியர் வரலாறு எடுத்துக் கூறுகிறது. நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு கூட, பரங்கியர் நமது மறவர்களை வெற்றி கொள்ளவில்லை. சில ஐந்தாம் படைகளைச் சில வெள்ளிகளுக்கு விலை பேசித் துரோகத்தின் மூலமே ஆதிபத்தியத்தை ஏற்படுத்தி

யுள்ளனர்.

   இந்நூல் முழுதும் வரலாறு, தக்க ஆதாரங்களுடன் விளக்கப் பெற்றுள்ளது. நாடு தழுவிய நிலையில் சுதந்திரப் போராட்ட உணர்வு தலையெடுத்து இருந்ததை ஆசிரியர் திரு எஸ்.எம் கமால், "'எங்கு பார்த்தாலும் மக்கள் கிளர்ச்சியின் சுவாலை கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது" என்று புதுக்கோட்டைத் தொண்டைமான் எழுதியுள்ள கடிதத்தின் மூலம் எடுத்துக் காட்டு கிறார்.
  பரங்கியர், கைக்கூலிகள் மூலம் மருதுபாண்டியரின் சீமைக்குள் மாடுருவ முயன்றனர். சிவகங்கைச் சீமைக்கு பொம்மை ஜமீன்தார் நியமிக்கப்படுகின்றார்.இந்தத்தருணத்தில் சிவகங்கைச் சேர்வைக்காரர்கள் ஒரு வேண்டுகோளை வெளியிட்டனர். இந்த வேண்டுகோள், ஒரு வேண்டுகோள் மட்டுமன்று. ஒரு சாசனம்.