பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122

தொலைவில் அவர்கள் வந்தவுடன் நாங்கள் அப்படியே அமர்ந்து கொண்டு அவர்களைச் சுடத் தொடங்கினோம். இவ்விதம் செய்ததினால் எங்களது அணியில் உள்ளவர்கள் பலரது உயிரைக் காப்பாற்ற முடிந்தது. அத்துடன் எதிரிகளுக்கும் ஏராளமான சேதத்தை ஏற்படுத்த முடிந்தது. ஒரே கூச்சலும் முனகலும் கேட்டன. என்றாலும் அவர்களது சுடுதல் ஓயவில்லை. இருபது நிமிடங்கள் கழித்து அமைதி ஏற்பட்டது. நாங்கள் முன்னேறி இன்னொரு உயரமான விசாலமான கண்மாய்க்கரையைப் பிடித்தோம். அங்கிருந்து மேலும் முன்னேறிச் செல்வது பற்றி தமது கூட்டாளிகளுடன் கேப்டன் வெங்டன் ஆலோசனை செய்தார். கைப்பற்றப்படவேண்டிய எதிரிகளது பீரங்கிகள் எங்கு இருக்கின்றன என்பது தெரியவில்லை. அந்தப் பாதையை எதிரிகள் கைப்பற்றிக் கொள்ள சிறிது அவகாசம் கொடுத்து பின்னர் மீண்டும் அங்கு திரும்புவது என முடிவு செய்யப்பட்டது. முற்பகல் முழுவதும் நூற்று ஐம்பது கஜ தொலைவிற்குக் காடு வெட்டப்பட்டது. சற்று நேரத்தில் எங்களது எதிர்பார்த்தலுக்கு மாற்றமாக எதிரிகளது பீரங்கிகள் எங்களுக்கு முன்னால் அறுநூறு கஜ தொலைவில் இருப்பது தெரியவந்தது. ஆனால் பிற்பகல் எங்களது நிலைக்கு திரும்பினோம். எப்படியும் பீரங்கிகளைக் கைப்பற்றவேண்டும் எனத் திட்டமிட்டு இருந்த கர்னல் இன்னிங்க்ஸூக்கு எங்களது வருகை பிடிக்கவில்லை. பதினைந்தாயிரத்திலிருந்து பதினாறாயிரம் வீரர்கள் கொண்ட எதிரிகள் அணியில் பெருத்த சேதம் ஏற்பட்டு இருக்க வேண்டும். நமது அணியில் ஒருவர் கொல்லப்பட்டு நால்வர் படுகாயமடைந்தனர். பாதையில் காத்திருந்த கர்னல் தால்ரிம்பிள் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பி வந்தார். அடுத்து பெருமழையும் பெய்தது.

ஆகஸ்டு - இருபதாவது நாள்

காலையில் இருந்து அஸ்தமனம் வரை மேஜர் ஷெப்பர்டும் அவரது தலைமையின் கீழ் நூறு பரங்கிகளும் ஐநூறு சுதேசி வீரர்களும் தங்களது ராணுவ நிலையில் நின்று மிகுந்த விழிப்புடன் பாதுகாத்து வந்தனர். எதிரிகளது துப்பாக்கி சுடுதல் சிறிது நேரம் நீடித்தது.

ஆகஸ்டு - இருபத்து ஒன்றாவது நாள்

இன்று முழுவதும் எதிரிகள் எங்களைச் சுட்டவாறு இருந்தனர். ஆனால் இழப்பு அதிகமாக இல்லை. மேஜர் ஷெப்பர்டும்