பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

123

அவரது அணியினரும் ஏற்கனவே வெட்டப்பட்டிருந்த பாதைக்கு எதிரில் வலது புறத்தில் முப்பது அடி அகலமும் இருருாறு அடி நீளமுங்கொண்ட பாதையை வெட்டி அமைத்தனர். மாலையில் பலத்த மழை பெய்தது.

ஆகஸ்டு - இருபத்து இரண்டாவது நாள்

இன்னும் எதிரிகள் எங்களைத் தொடர்ந்து வந்து சுட்டனர் இழப்பு அதிகம் இல்லை. மேஜர் பெர்ஷனது அணி சிறிது துரம் பாதை அமைத்தது. மாலையில் மீண்டும் பலத்த மழை.

ஆகஸ்டு - இருபத்து மூன்றாவது நாள்

பாசறையில் ஏற்பட்டுள்ள ஆயுதப் பற்றாக்குறையைப் போக்குவதற்கும் தேவையான பொருட்களைப் பெற்று வருவதற்கும் கர்னல் இன்னிங்ஸ் குதிரைப்படை அணியுடன் திருமெய்யம் சென்றார். அவர்களுடன் ஏராளமான தபால்களும் அனுப்பி வைக்கப்பட்டன. கடந்த இருபத்து ஐந்து நாட்களாக, எதிரிகள் நம்மைச் சூழ்ந்து கொண்டு செய்திப் போக்குவரத்தைத் துண்டித்து விட்டதால், இந்தத் தேக்கநிலை ஏற்பட்டது. மேலும் உடல் நலிவுற்ற கர்னல் தாலரிம்பிள், மேஜர் கிராண்ட், டாக்டர் ஒயிட், லெப்டினண்ட் காம்ப்பெல் ஆகியோர் அனுமதி பெற்று பாசறையில் இருந்து சென்றனர். என்.எம்.சுமித், தலைமையில் பாதுகாப்பு அணி நமது நிலையைச் சுற்றிய நிலப்பகுதியைச் செம்மை செய்தனர். காட்டிற்குச் செல்லும் பாதையின் முகப்பில் இன்னொரு ராணுவ நிலையையும் அமைத்தனர். முன்னேறிச் செல்லும் அணியினருடன் தொடர்பு வைத்துக் கொள்வதற்காக முற்பகல் 10.30 மணிக்கு மூன்று பீரங்கிகளைக் கொண்டு எதிரிகள் எங்களைச் சுட்டனர். நமது அணியினர் சென்று பீரங்கிகளைக் கைப்பற்று வதற்குள் அவர்கள் சுடுதலை நிறுத்தி மறைந்துவிட்டனர்.

ஆகஸ்டு - இருபத்து நான்காவது நாள்

மேஜர் ஷெப்பர்டு அணி நிலப்பரப்பை செம்மை செய்யும் பணியை முடித்து மாலையில் திரும்பியது. பாதையின் இருபுறத்திலும் இருந்தும் எதிரிகள் தாக்குதல். நமது அணியில் ஒருவர் கொல்லப்பட்டார்.