பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126

தார். அப்பொழுது அவருடன், அவரது தமையனாரும் ஒரு வயதான பார்ப்பனரும் வந்தனர். இந்த மனிதர் சின்னமருது சேர்வைக்காரரது பழி வாங்கும் நடவடிக்கைகளுக்குத் தப்பி அறந்தாங்கியில் இருந்த ஒய்யாத்தேவருடன் சேர்ந்து கொண்டவர் சிவகங்கையில் இருந்து தப்பி வந்தபிறகு தனது குடும்பத்தினரை மிகவும் அவமானப்படுத்தி விட்டதாக இவர் சின்னமருது சேர்வைக்காரரைப்பற்றி கும்பெனியாரிடம் புகார் செய்தார்.[1] வளமையான பாராட்டுக்களைப் பரிமாறிக் கொண்டவுடன், அவர் தமது கூடாரத்திற்குத் திரும்பினார். பார்ப்பதற்கு அவர் அழகாக இருந்தார். ஆனால் பிரிட்டிஷ் அரசு அவரை எதிர்பாராத வகையில் உயர்த்தியுள்ள அந்தஸ்துக்கு, அவர் பழக்கப்பட்டவராகத் தெரியவில்லை. அத்துடன் அவருக்கு அளிக்கப்பட்டுள்ள ஆதரவிற்கு நன்றியுடையவராகவும் காணப்பட்டார். அவரது அந்தஸ்தை உயர்த்தியதற்கு மற்றவர்கள் எத்தகைய காரணங்களைக் கற்பித்தாலும் சரி, ஆனால் அவரது விசுவாசத்திற்கு நாம் மதிப்பளித்தோம். வறுமையிலும் நலிவிலும் இருந்த அவரை, ஒரு அரசின் இளவரசர் நிலைக்கு உயர்த்தி, அவரது பாராட்டுதலுக்கு உரியவராகி விட்டோம் என்பது உறுதி.

சிறுவயலில் இருந்து காளையார்கோவிலை புதியபாதை அமைத்து அடைவது என்ற தமது முடிவில் மேலும், முனைந்து செல்லாமல் அங்குள்ள பாசறையில் இருந்து நீங்குவது என முடிவு செய்யப்பட்டது. இதனால் நமது அணியினர் அனைவருமே மகிழ்ச்சி அடைந்தனர். நமது தோழர்கள் பலரை பலிகொண்டு கல்லறையாக மாறிய இடமல்லவா அந்தப்பாசறை. அங்கு நமது மானத்திற்கு இழிவு ஏற்பட்டதை எண்ணி, நமது ஒரு மாத கடுமையான உழைப்பு வீணானதைப் பற்றி, அவர்கள் கவலை கொள்ளவில்லை. வேறு இடங்களில் உள்ள வசதிகளை எண்ணிப் பார்க்கும் பொழுது, நமது இந்த முகாம் நோயாளிகளது கூடாரமாக வல்லவா மாறி இருந்தது! பலர் வயிற்றுக் கடுப்பினாலும், வயிற்றுப் போக்கினாலும் வருந்தி வந்தனர். பல அலுவலர்களும் வீரர்களும் இந்தக் கொடுமைகளினால் இறந்து விட்டனர். இவைகளில் இருந்து தப்பித்து, நல்ல உடல் வலிவுடன் இருந்த சிலர், மன நோயினால் கஷ்டப்பட்டு வந்தனர். கொஞ்சங்கூட செடிகொடி இல்லாத கட்டாந்தரை இந்தப்பாசறை. எப்பொழுதும் தமது கண்களில் துாரத்தில் படுவது மனிதர் புகமுடியாத நெருக்கமான காடு. அதற்குள் இருந்து கொண்டுதான் கோழைகள் நம்மைக் கொடு

5

  1. Military consultations, vol. 295 (A) (28-6-1801)p. 5034