பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

x

அந்த வேண்டுகோள், “உங்களிடையே ஒற்றுமை இல்லை; நேயமனப்பான்மை இல்லை” என்று நாட்டு மக்களைச் சாடுகின்றது. எவ்வளவு உண்மை! இன்று மட்டும் என்ன வாழ்கின்றது! இன்றும் நம்மிடையில் ஒற்றுமை இல்லை நேயமனப்பான்மை இல்லை. அன்னிய ஆதிக்கத்திற்குத் துணை போகின்றவர்கள் “பரங்கியரின் இரத்தக் கலப்புடையவர்கள்” என்று பச்சைத் தமிழில் மருதுபாண்டியர்கள் திட்டித் தீர்த்துள்ளனர்.

மருதுபாண்டியர் வரலாறு தரும் படிப்பினைகளில் ஒன்று, வீரம் ஒன்று மட்டுமே வெற்றி தராது, விவேகமும் பழகும் பாங்குகளும் தேவை என்பதாகும். மருதுபாண்டியர், படமாத்தூர் ஒய்யாத்தேவரிடமும், அரசி வேலுநாச்சியார் முதலியவர்களுடனும் இராமநாதபுரம் அரசருடனும் பிணக்குகளை வளர்த்துக் கொண்டன விவேகமான செயல்களாகாது என்று நூலாசிரியர் கணித்துக் கூறும் உரை நூற்றுக்கு நூறு சரி! இது மட்டுமா? “பொதுமக்களது நினைவாற்றல் மிகவும் பலவீனமானது” என்ற வாசகத்தை நூலாசிரியர், சிவகங்கைச் சீமை மக்களுக்குப் பொருத்திக் காட்டுவது நூற்றுக்கு நூறு சரியே! “சிவகங்கை சீமை ஒற்றைக்கால் கழனிச் சீமை” என்ற செவிவழக்கும் உண்டு.காலப்போக்கில் காளையார் கோவில் என்றெல்லாம் பாராட்டப்படும் ஊர், கடுமையான போராட்டத்தைச் சந்தித்தது! சூழ்ச்சி வென்றது! வீரம் படுத்தது! தமிழகமே! உனது வரலாற்றில் பெரும் பகுதி ஐந்தாம் படைகளால் ஆனது! இனியாவது புத்தி வருமா?

நூலாசிரியர் வரலாற்றுப் போக்கில் இன்றும் என்றும் பயன்படக் கூடிய அறிவுரைகளை வழங்கியுள்ளார். “தருமம் தழைக்க தங்களது மண்ணில் அதருமர்களான ஏகாதிபத்திய நாய்கள் அட்டகாசம் செய்யக் கூடாது. மக்களது நலன்களைப் பாதுகாக்கும் மன்னர்களது தன்னரசுகள் தழைத்து ஓங்க வேண்டும்” எனும் ஆசிரிய உரை அற்புதமானது.

நமது நாட்டின் வரலாற்றில் வீரர்கள் உண்டு; வீரத் தாய்மார்கள் உண்டு. ஆயினும் என் செய்வது? கோழைகள் கூட மாமேருவைச் சிற்றெறும்பாக்கி விடுகின்றனர். மகாராஷ்டிரத்து துந்தியா, இராமநாதபுரம் முத்துராமலிங்க சேதுபதி மன்னர் ஆகியோர். தியாக ஒளி விளக்குகள்! மலை மேல் ஏற்றிய விளக்குகள்! ஆயினும் என் செய்வது? எழுதக் கை நடுங்குகிறது! இந்த நாளில்