பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

133

டிருந்த நெருங்கிய உறவு காரணமாக அதிகாரத்தைத் தாங்களாகவே அரசியாரது ஒப்புதல் இல்லாமல், அந்தச் சீமையின் அரசுப் பரம்பரையின் வழித்தோன்றல் போல “ராஜமான்யராக”[1] அந்தச் சீமை அரசை இயக்கி வந்தவர்கள் அந்தப் பிரதானிகள். அவர்கள் தங்களுக்கு இணக்கமாக, விசுவாசிகளாக இருந்தவரையில், கும்பெனியாரது கண்களுக்கு இந்தப்பிரதானிகள் சிவகங்கை சீமையின் சரியான அரசியல் வாரிசாகத் தோன்றினர். ராணி வேலுநாச்சியாருக்குப் பிறகு வேங்கன் பெரிய உடையாத் தேவர். என்பவர் எட்டு ஆண்டுகளுக்கு மேலாக சிவகங்கைச் சீமையின் அரசபரம் பரையின் சின்னமாக – சிவகங்கை மன்னராக இருந்ததைக்கூட அவர்கள் மறந்து இருந்தனர். தங்களது அரசியல் கொள்கைக்கு ஆதரவாக, ஏன் முழுவதும் இணக்கமாக, இருந்த சிவகங்கைச் சீமை பிரதானிகளான மருது சேர்வைக்காரர்களிடம் மட்டும் அரசியல் தொடர்பு கொண்டு இருந்தனர். “மதுரை நாயக்கர்” “தஞ்சை மராத்தியர்” “மைசூர் சுல்தான்” “சேதுபதி மன்னர்” என அந்தந்த அரசர்களை அவர்தம் இனவழியாக குறிப்பிடுவது போல கும்பெனியார், “சிவகங்கை அரசர்” என அந்த ஆட்சியாளரை அழைப்பதை விடுத்தும், அவர்தம் ஆவணங்கள், கடிதங் களில் மருது சகோதரர்களை “சிவகங்கைச்சீமை சேர்வைக்காரர்” என அன்புடனும் மரியாதையுடனும் குறிப்பிட்டு வந்தனர்.[2]

இப்பொழுது, அதே பிரதானிகள், கும்பெனியாரது ஏகாதி பத்திய கொள்கைக்கு எதிராக, மக்கள் விரோதச் செயல்களுக்கு முரணாக, ஏனைய தென்னிந்திய கிளர்ச்சிக்காரர்களுடன் கூட்டு சேர்ந்தும், அத்தகையவர்களுக்குத் தங்கள் சீமையில் புகலிடம் அளித்தும், அவர்களைத் தங்களுடன் இணைத்தும், ஏகாதிபத்திய வெறியை முற்றாக அழிக்க ஆயுத பலத்துடன் எதிர்க்க முனைந்த பொழுது, கும்பெனியாருக்கு “ஞானோதயம்” ஏற்பட்டது. அவர்களை எதிர்க்க பகையாண் அமைக்கும் போர் மறவர்களான பிரதானிகள் சிவகங்கைச் சீமையின் அரசியலுக்கு சம்பந்த மற்றவர்கள் என்ற உண்மை ஏற்கனவே தஞ்சாவூர் மராத்திய அரசைத் தங்களது ஆதிக்கத்திற்குள் கொண்டுவர ஆசைப்பட்ட


  1. தொண்டிங்கர் கைக்கோளர் குளத்து கல்வெட்டு வாசகம், மடப்புரம் காவேரி ஐயனார் கோயில் ஓலைச்சாசனம்
  2. Military Consultations vol. 185 (B) (3-6-1794) p. 219