பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134

பொழுதும், கும்பெனியாருக்கு இத்தகைய ஞானோதயம் தான் ஏற்பட்டது. அந்தச்சீமையின் அரசராக அமீர்சிங்கை அந்தச்சீமை, அரசியல் வாரிசு அல்ல என முடிவு செய்து, இரண்டாவது சரபோசியை அக்டோபர் 1798 ல் மன்னராக்கினர்.[1] இதில், உள்ள வேடிக்கையான அம்சம் என்னவென்றால், அதே அமீர் சிங்தான் உண்மையான வாரிசு என கும்பெனியாரது தலைமை, எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் முடிவு செய்தது.[2]

அந்தப் பாடத்தைத்தான் அவர்கள் இப்பொழுது சிவகங்கைச் சீமையிலும் படித்தனர். இந்தச்சீமை மக்களுக்கு ஏற்படாத கவலை வேற்று நாட்டாரான வெள்ளைப் பரங்கிகளுக்கு ஏற்பட்டது. இங்கிலாந்து நாட்டில் இருந்து வியாபாரத்திற்காக இங்கு வந்து, மிகுதியாகக் கிடைக்கும் கைத்தறித்துணி, மிளகு, ஏலக்காய், கிராம்பு ஆகியவைகளை வாங்கிச் சென்று வியாபாரம் செய்ய வந்த அந்த கூட்டத்தாருக்கு ஏற்பட்டது. சிவகங்கைச் சீமை மக்களது அல்ல பரங்கிகளது - கவலையைப் போக்க சிவகங்கை அரசுக் கட்டிலுக்கு பரம்பரைத் தகுதி வாய்ந்த ஒருவரைத் தேடிக் கொண்டு இருந்தனர். தங்களது ஆதிக்கப் பேராசைக்கு அடிபணிந்து இணங்கிச் செல்லும் தலையாட்டி பொம்மையைத் தேடினர். கண்டுபிடித்தும் விட்டனர். அவர், சிவகங்கைச்சீமையைத் தோற்றுவித்த நாலுகோட்டை பெரிய உடையாத் தேவரது மகனான சசிவர்ணப் பெரிய உடையாத் தேவருக்கு ஒருவகையில் பேரன் முறையிலான படைமாத்துர் ஒய்யாத்தேவர் என்ற கெளரி வல்லபத்தேவர் என்பவராகும்.[3] சிவகங்கை அரசுக்கு படை மாத்துார் ஒய்யாத்தேவரைத் தவிர, அந்த அரசபரம்பரையினருக்கு நெருங்கிய உறவினர்களாக கட்டனூர் திருக்கத்தேவர், அரளிக்கோட்டை நல்லனத்தேவர், சேவற்கோட்டை பெரிய உடையாத்தேவர், செம்பனுர் ராசத்தேவர். ஒளிக்குடி முத்துக் கருப்பத்தேவர், சக்கந்தி முத்துக்குமாரத்தேவர் ஆகியோர்களும் இருந்தனர்.[4] அவர்களின் வழியினரைப்பற்றி எல்லாம் கும்பெனி-


  1. Political Despatches to England vol. 4 p. 200-208. (15-1-1798)
  2. Militaty Country Correspondence vol 41, (25-2-1791), pp. 204-219
  3. Rajayyan Dr. K: History of Madura (1974) p. 371.
  4. மறவர்சாதிவிளக்கம் சுவடிஎண் 370 (கீழைநாட்டுச் சுவடி நூலகம் சென்னை)