பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

135

யார் விசாரித்து முடிவு எடுக்கவில்லை. ஆனால் அவர்களது பேராசைக்குப் பணிந்து நடந்து கொள்ளக் கூடியவர், படை மாத்தூர் கெளரிவல்லப ஒய்யாத்தேவர். ஒருவர்தான் என்பது அவர்கள் கண்ட முடிவு.

ஆதலால், அவரை சிவகங்கைச் சீமையின் சரியான, உண்மையான வாரிக என்பதை சீமை மக்களிடத்தில் பகிரங்கப்படுத்த முயன்றனர்.[1] சாதாரண மக்களின் சிந்தனையில் குழப்பத்தை ஏற்படுத்தி, கும்பெனியாரை அழிக்க கச்சையை வரிந்து கட்டிக் கொண்டு நிற்கும் சிவகங்கை சேர்வைக்காரர்களது அணியில் பிளவையும், பலவீனத்தையும் உண்டாக்க வேண்டும் என்பது அவர்கள் திட்டம். சிவகங்கைச் சீமையின் “ஜமீந்தார்” கெளரி வல்லப ஒய்யாத்தேவர்தான் என்ற விளம்பர பட்டோலையைப் படிப்பதற்காக அலங்கரிக்கப்பட்ட யானை ஒன்றில் கன்னையன் என்ற கைக்கூலியை அமர்த்தி முதலில் சோழபுரம் கிராமத்தில் படித்து விளம்பரம் செய்யுமாறு ஏற்பாடு செய்யப்பட்டது. அவனும் அந்த பட்டோலையை மிகவும் பயபக்தியுடன் தெருமுனைகளில் நின்று உரக்கப்படித்தான். அந்த விளம்பரத்தைப் படிப்பதற்கு முன்னும் பின்னும் முரசு முழக்கப்பட்டது. தொடர்ந்து சோழ புரத்தை அடுத்துள்ள நாலுகோட்டை, ஒக்கூர், பாகனேரி, பட்ட மங்கலம் ஆகிய ஊர்களிலும் அந்த விளம்பரம் படிக்கப்பட்டது.[2] இந்த ஊர்கள் ஒய்யாத்தேவருக்கு இணக்கமான அல்லது கும்பெனிப்படையணிகள் நிலைகொண்டுள்ள பகுதிகளை ஒட்டி அமைந்து இருந்தவைகளாகும்.

சிவகங்கையில் இருந்து புதுக்கோட்டை செல்லும் பெருவழியில் ஆறாவது கல்லில் அமைந்திருக்கும் சிற்றூர் சோழபுரமாகும். இந்தப் பெயரில் தெற்கே பாண்டியநாட்டில் மதுரை - நெல்லைப் பெருவழியில் ராஜபாளையத்தையடுத்தும், சோழநாட்டில் தஞ்சாவூரையடுத்தும், தொண்டை நாட்டில் சென்னையடுத்தும் இதே பெயரில் ஊர்கள் அமைந்து உள்ளன. இவை அனைத்தும் பத்து பதினோராவது நூற்றாண்டில் சோழர்கள் தென்னகத்தை கையகப்படுத்திக் கொண்டதைக் குறிக்கும் முகமாக பெயரிடப்பட்ட ஊர்-


  1. Revenue Consultations, vol. 116, (24-7-1801), p. 1361-69
  2. Revenue Sundries, vol. 26, (13-9-1801), pp. 33–34