பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xi

தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வாது. காலச் சூழ்நிலைக்கேற்பப் புத்தியும் தடுமாறுகிறது. மாவீரர் மருதுபாண்டியர் இராமநாதபுரம் முத்துராமலிங்க சேதுபதி மன்னருடன் பகைக் சிவகங்கைச் சீமையில்-தமிழ் நாட்டில் "கும்பகர்ணர்கள்” இல்லை. காமல் இருந்திருந்தால் வரலாறு வேறுதிசையிலும் சென்றிருக்க வாய்ப்பிருந்தது.

நாடு தழுவிய நிலையில் நடந்த சுதந்திரப் போராட்டத்தை சிறப்பாகச் சிவகங்கைச் சீமைப் போரை, மாபாரதப் போருடன் ஒப்பிட்டு ஆசிரியர் எழுதியுள்ள பகுதி, மிகவும் சிறப்புடையது. மாபாரதப் போரில் அநீதியின் உருவமான துரியோதனன் அணியில் தானே துரோணரும் பீஷ்மரும் இருந்தனர். அதுபோல, சிவகங்கைச் சீமைப் போரில் பலர் பரங்கியர் பக்கம் போய் விட்டனர் என்பது உண்மை. எப்போதுமே நல்லவர்கள் வல்லவர்களாக இருப்பது இல்லை. நன்மைக்கும் கோழைத் தனத்திற்கும் ஒட்டும் இல்லை; உறவும் இல்லை! ஆனால், சிவகங்கைச் சீமை வரலாறு வேறு மாதிரியாக அமைந்துவிட்டது !

மருது பாண்டியர் வீர வரலாறு ஒரு நல்ல நூல். வரலாற்று நூல்கள் எப்படி அமைய வேண்டுமோ அப்படி அமைந்துள்ளது. அனைத்துச் செய்திகளுக்கும் போதிய ஆதாரங்கள் திரட்டப் பெற்றுள்ளன. வரலாற்றுப் போக்கில் தடங்கள் வழி நமக்கு உணர்த்த வேண்டிய அறிவுரைகளை நூலாசிரியர் அமைவுறத் தந்திருப்பது நூலுக்குள்ள தனிச் சிறப்பு! இத்தகு சிறப்புடைய ஒரு வரலாற்று நூலை டாக்டர். எஸ்.எம். கமால் அவர்களைத் தவிர வேறு யாரால் எழுத முடியும் ! ஒரு சிறந்த நூலைத் தந்து சிந்தனையைத் துாண்டிய டாக்டர் எஸ்.எம். கமால் அவர்களுக்கு நன்றி: கடப்பாடு. பாராட்டு வாழ்த்துக்கள் !

- அடிகளார்.