பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

143

மாகத் தென்பட்டன. முதலாவது, மருது சேர்வைக்காரர்களும் பலவிதமான இடையூறுகளுக்கு மிடையிலும் அவர்களைச் சார்ந் துள்ள நாட்டுப்பற்றுள்ள நல்லவர்களும், இரண்டாவது புதிய ஜமீன்தாருக்கும் பரங்கிகளுக்கும் விசுவாசிகளாக, மனம் மாறிய வர்களாக, சரணடைதல், அல்லது தங்களது இலட்சியத்தில் நம் பிக்கை கொண்டவர்களாக முடிவைப்பற்றி சஞ்சலப்படாமல் தொடர்ந்து, இறுதிவரை போராடுவது, இந்த இரண்டாவது வழிதான் மருதுசேர்வைக்காரர்களுக்கு இணக்கமானதாக இருந்தது. இதே வழியைத்தான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தன்னேரிலாத தியாகி மைசூர் திப்புச்சுல்தான் தேர்ந்தெடுத்து இருந்தது அவர்களது நினைவில் பசுமையாக இருந்தது. தமது பேரரசைச் சுற்றிப் பொறாமையுடன் காத்திருந்த தேசத்துரோகிகளான மராத்திய மன்னரையும். ஹைதராபாத் நிஜாமையும், திருவாங்கூர் அரசரையும் அவர்களது பேராதரவாளராக ஓடிவந்த கும்பெனியாரையும் தன்னந்தனியே எதிர்த்து நின்று இறுதி மூச்சு வரை போராடி, விழுப்புண்ணுடன் களத்தில் வீழ்ந்து மடிந்த, அந்த மாவீரனது மகத்தான வரலாற்றை அவர்கள் மறந்து விடவில்லை.

அரண்மனைச் சிறுவயல் காட்டில் பிடிபட்ட போராளி ஒருவன் துரோகியாக மாறினான். குழைந்து, இழைந்து, பேசிய அக்கினியூவின் ஆசைவார்த்தைகளில் மயங்கி மனம்மாறிய அந்தக்கழிசடை, காளையார்கோவில் கோட்டைக்குச் செல்லும் இரகசியப்பாதையைக்காட்டிக் கொடுத்ததுடன், காளையார்கோவில் கோட்டைப் பாதுகாப்பு நிலைகள் பற்றிய அரிய தகவல்களையும் தெரிவித்துவிட்டான்.[1] முப்பத்து இரண்டு நாட்களாக அங்குலம் அங்குலமாக போரிட்டு முன்னேற முயன்றும் போராளிகளது எதிர்ப்பினால் பின்னடைந்து பரிதவித்த கும்பெனியாருக்கு, இதைவிடச் சிறந்த உதவியை வேறு யார் செய்ய முடியும்? அப்புறம் என்ன – காளையார்கோவில் போரின் முடிவு தெரிந்த ரகசியமாயிற்று அன்றைக்குச் சரியாக முப்பத்து ஏழு ஆண்டுகளுக்கு முன்னால் ஓராண்டுக்கு மேல் நீடித்த மதுரைகோட்டை முற்றுகையில் மாவீரன் கம்மந்தான் கான்சாகிபுவின் போர் ஆற்றலுக்கு முன்னால், செல்லாக் காசாகிவிட்ட கும்பெனி படைபலமும் ஆர்க்காட்டு நவாப்பின் ராஜதந்திரமும் மீண்டும் உயிர்


  1. Military Consultations vol. 288 (A) (2-10-1801) p. 6866-67