பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144

பெறுவதற்கு அங்கு இப்படி ஒரு இழிந்த பிறவியை கும்பெனியார் தேர்ந்தெடுத்தனர். கான்சாகிபுவின் அந்தரங்க அலுவலராக இருந்த திவான் சீனிவாசராவ் என்ற அந்தப்பாவி பொன்னுக்கும் பொருளுக்கும் ஆசைப்பட்டு, இறைவழிபாட்டில் ஈடுபட்டு இருந்த கான்சாகிபை, கயிற்றால் பிணைத்து அந்தப்புர மகளிர் முட்டாக்கு போட்ட பல்லக்கில் ஏற்றிச் சென்று கும்பெனியாரிடம் ஒப்படைத்தான். அதே துரோகியினால் மதுரைக்கோட்டை விழுந்தது. மானத்திற்காகப் போராடிய கான்சாகிப் அழிக்கப்பட்டார்.[1] சங்க காலத்துச் சேரமன்னன் கணைக்கால் இரும்பொறை கழுமலம் போரில் தோற்று சோழனிடம் கைதியாக இருந்தபொழுது, சோழனது வீரர்கள் அலட்சியமாக அளித்த தண்ணீரைக்கூட குடிக்க மறுத்த கணைக்கால் இரும்பொறை போன்று கும்பெனியார் வழங்கிய உணவைக்கூட ஏற்றுக் கொள்ள மறுத்து இரண்டு நாட்கள் பட்டினியாக இருந்த கான்சாகிபுவை 16-10-1764 ல் தூக்கில் தொங்கவிட்ட பிறகுதான் கும்பெனியாருக்கு மதுரைக் கோட்டைக்குள் நுழைய தெம்பு ஏற்பட்டது. பெரும்பாலும் தாயகம் காக்கப் போராடிய மக்கள் தலைவர்களை நேரில் போராடி வெற்றிகொள்ள இயலாத பரங்கிகள் “பொற்காசுகளைக்” கொடுத்துத்தான் வெற்றியை விலைக்கு “வாங்கி இருக்கிறார்கள்” என்பது வரலாறு.

அப்பொழுது கர்னல் அக்கினியூ தமது தலைமை இடமான சென்னைக்கு அனுப்பிய கடிதத்தில், “... ... ... கடந்த சில நாட்களாக, கிளர்ச்சித் தலைவர்களைப் பின்பற்றி வரும் பலர், அவர்களது அணியில் இருந்து பிரிந்து வந்து விட்டனர். அங்கு நல்ல பதவிகளில் இருந்து நன்கு அனுபவம் பெற்றுள்ள சிலர், என்னிடம் வந்துள்ளனர். அவர்களில் ஒருவன் விசாரணையின் பொழுது எனது வினாக்களுக்குப் பொருத்தமான பதில் கொடுத்து இருக்கிறான். அதன் அடிப்படையில், காளையார்கோவில் போரில், திடீரென்று தாக்குவதற்கு திட்டம், அத்துடன் ஏற்கனவே அரண்மனை சிறுவயலில் இருந்து காட்டை அழித்து ஏற்படுத்தி வந்த பாதையை ஒட்டி ஆள் நடமாட்டமில்லாத ரகசிய வழியில், எங்களுக்கு வழி காட்டிச் செல்வதற்கும், அவன் உடன்பட்டு இருக்கிறான். ஆதலால் கிளர்ச்சிக்காரர்கள் சந்தேகம் கொள்ளாத


  1. Hills S. C: Yousuff Khan, The Rebel commandant (1914).