பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

145

வகையில் எதிரிகள், பலமாக அமைத்துள்ள தற்காப்பு நிலைகளுக்கு முன்னேறிச் செல்வது என முடிவு செய்து இருக்கிறேன்”. எனக் குறிப்பிட்டு இருந்தார்.[1]

காளையார் கோவிலுக்கான போர் உத்திகளை மாற்றிக் கொண்டு வழியில் உள்ள போராளிகளை ஏமாற்றி, அவர்களுடன் போராடாமல் திடீரென காளையார் கோட்டையில் போய் நிற்பது என்பது அக்கினியூ வகுத்த திட்டம். அதற்குத் துணை புரிந்தன அந்த துரோகி வழங்கிய துப்புகள். அவர்களது புதிய திட்டப்படி, போராளிகளுக்கு எவ்வித சந்தேகமும் ஏற்படாத வகையில், சோழபுரம் பாசறையில் இருந்து கர்னல் இன்னிங்ஸ் தலைமையில் இருந்த அணி காளையார் கோவில் வழியில் உள்ள கீரனூரை அடைதல் வேண்டும். மேஜர் அக்கினியூ தலைமையில் இன்னொரு அணி ஒக்கூரில் இருந்து புறப்பட்டு வாணியங்குடி முத்துார் போய்ச் சேரும். இந்த இரு அணிகளும் தென்கிழக்கு திசைநோக்கி தாக்குதல் நடத்தி வரும் பொழுது, போராளிகளது கவனம் முழுவதும் அந்த அணி மீது மையங்கொண்டு இருக்கும். அப்பொழுது கர்னல் ஸ்பிரேயின் இரகசிய அணி, கர்னல் வெடிப்பர்டின் உதவியுடன் வடக்கே அரண்மனை சிறுவயலில் இருந்து புறப்பட்டு, ஏற்கனவே, துரோகி காலித் காண்பித்துள்ள இரகசியப் பாதை வழியாக எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் காளையார் கோவில் கோட்டையை நெருங்குதல் வேண்டும்.

அரண்மனை சிறுவயல் காட்டுப்பகுதியில் இருந்து காளையார் கோவில் நோக்கி முன்னேற கர்னல் ஸ்பிரேக்கு அக்கினியூ வழங்கிய இந்த அறிவுரையில் இருந்து இந்தப் போர் பற்றி அவனது தெளிவான ஆற்றலும் அக்கரையும் வியக்கத்தக்கதாக இருந்தது.

“... .... ...இந்த சிறிய அணியினது இயக்கம், காளையார் கோவிலில் நிலை கொண்டுள்ள எதிரியை பிரமிக்கச் செய்து அந்த நிலையைக் கைப்பற்றுவதுதான். எதிரி தாக்குதலுக்குத் தயாராக இருக்கிறான். முன்னேறிச் செல்லும் காட்டுப்பாதையை முகாமில் இருந்து வெட்டுர் வரையும், பின்னர் வெட்டூரில் இருந்து காளையார் கோவில் வரையும் நன்கு பாதுகாப்புக்குள்ளதாக


  1. Military Consultations, vol. 288 (A)(2-10-1801)p.p. 6865-66