பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/165

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

146

ஆக்கி கொள்ள வேண்டும். பாதையைக் காண்பிக்க நம்பிக்கையான வழிகாட்டி ஒருவன் உண்டு. 77வது ரெஜிமெண்டின் 11வது அணியும், 6வது ரெஜிமெண்டின் சுதேசி வீரர்களுடன் ஐம்பது பயனீர்களும் வருவார்கள். காடு அழிக்கப்பட்டுள்ள பகுதிவரையான பாதை கேப்டன் பேஷ்ஷாவுக்குத் தெரியும். இந்தத் திட்டத்திற்கு தூக்கு கூலிகளையும் பொதி மாடுகளையும் பயன்படுத்தக் கூடாது. வெடிமருந்தை லஸ்கார் கூலிகள் மூலம் சுமந்து செல்லவும், நமது படை முகாமில் இருந்து காடுகள் அப்புறப்படுத்தப்பட்ட பகுதி வரை நிலம் சரிந்து தாழ்வாக உள்ளது. மழை காரணமாக ஈரமாகவும் இருக்கலாம். பத்தாவது மைலில் மற்றொரு பாதை உள்ளது. வழியில் கிளர்ச்சிக்காரர்களை சந்திக்க நேரிட்டால் அவர்கள் மீது துப்பாக்கி கொண்டு சுடாமல் சமாளிக்கவும். சிறு வயல் பகுதியில் பாதையை இரண்டரை மைல் வரை கவனித்து முன்னேற வேண்டும். விரைவாகவும் முன்னேற வேண்டும். நமது அணியைப் பார்த்து, தங்களது கூட்டாளிகளுக்கு எதிரிகள் எச்சரிக்கை செய்வதற்கு முன்னர், அவர்களைத் தாக்கி சமாளிக்க வேண்டும். மிகுந்த முயற்சியுடன் முனைதல் வேண்டும். எதிரிகள் சுட்டால் நின்று விடவும், வெட்டூர் ரோட்டின் இடதுபுறம் முக்கால் மைல் தொலைவில் சுள்ளி ஊரணி இருக்கிறது. அங்கு அணிகளை நிறுத்தி ஆயத்தம் செய்து கொண்டு உடனே தாக்குதலில் ஈடுபடவும். கோயிலைக் கைப்பற்றவும். அதன் நுழைவாசலை வெடி வைத்துத் தகர்த்தோ,கோடாரியினால் வெட்டி உடைத்தோ, அல்லது தீயிட்டுக் கொளுத்தியோ முன்னேற வேண்டும். அதற்கு எதிர்ப்பு இருந்தால், குழப்பத்தையும் கூச்சலையும் அதிகப்படுத்தவும்.

“முகாமில் இருந்து இரவு 10.00 மணிக்கு புறப்படவும். கிழக்கே உள்ள சாலைக்கு காலை இரண்டு மணிக்குள் வந்து விடவும். பெரும்பாலும் நிலா வெளிச்சம் மூன்று மணி முதல் இருக்கும். விடியலுக்கு முன்னர் இலக்கை அடைந்து விட வேண்டும்.

“இந்த முயற்சி இயலாததாகிவிட்டால், ரோடு வழியாக நான்கு கல் தொலைவில் உள்ள முத்துப்பட்டிக்கு வந்துவிடவும். நான் பெரும்பாலும் இரவு 10.00 மணிக்கு முத்தூர் வந்து விடுவேன். வந்து சேர்ந்ததை, அங்கிருந்து ஒரு நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து வெடிக்கும் மூன்று பீரங்கி குண்டு முழக்