பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/166

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

147

கத்தில் இருந்தும், தொடர்ந்து ஐந்து நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து வெடிக்கும் கூடுதலான மூன்று குண்டுகள் முழக்கத்தில் இருந்தும் புரிந்து கொள்ளவும்.[1]

இந்த திட்டம், அப்படியே நிறைவேற்றப்பட்டது. ஒக்கூர், சோழபுரம், முத்தூர், கொல்லங்குடி ஆகிய வழியில் உள்ள பாதுகாப்பு நிலைகளில் இருந்து பரங்கியர் அணிகளைத் தாக்கிய கிளர்ச்சிக்காரர்கள் அனைவரும் முறியடிக்கப்பட்டனர்.[2] ஆனால் வழியெங்கும் மிகவும் வெறித்தனமாக தாக்குதலையும் துப்பாக்கிச் சூட்டையும் போராளிகளிடமிருந்து சந்தித்ததாகவும், ஆங்காங்கு பாதைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்ததாகவும் அவைகளைக் கடந்து முன்னேறுவது மிகவும் சிரமமாக இருந்ததாக கர்னல் இன்னிங்ஸின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.[3] ஒரு கண்மாய்க்கரையில் நடந்த மோதலில் மட்டும், வீரத்துடன் பேராடிய போராளிகள் நூறு பேர்கள் தியாகிகள் ஆனார்கள். அவர்களை வெற்றி கொண்ட அந்தப்பரங்கி அணி இரவு 10.00 மணிக்கு முத்துார் வழியாக கீரனூரை அடைந்தது. பிறகு கொல்லங்குடிக்கு முன்னேறியது.

அங்கு ஊரைச்சுற்றி முள்ளினால் தடுப்புகள் அமைத்து இருந்தனர். பாங்கிகள் இரண்டு அணிகளாகப் பிரிந்து ஊரைச் சூழ்ந்தார்கள். எல்லாத் திக்குகளில் இருந்தும் போராளிகளது பயங்கரமான துப்பாக்கிச் சூடு தொடர்ந்தது. அவர்கள் சுட்டுக் கொண்டே இருந்தனர். அவர்கள் ஏற்படுத்தி இருந்த முள்வேலிகள் அவர்களுக்கு மிகுந்த பாதுகாப்பைக் கொடுத்ததுடன் மிகுதியான சேதம் ஏற்படாமலும் அவர்களுக்கு உதவியது.[4] என்றாலும், பரங்கிகள் சும்மா இருந்து விடவில்லை. நடுநிசி என்று கூட நினைக்காமல் கொள்ளிவாய்ப் பேய் பிசாசுகளைப்போல, போராளிகளை வளைத்து கொடூரமாகத் தாக்கினர். கிளர்ச்சிக்காரர்கள்


  1. Secret Consultations, vol. 26 (1801 AD). pp. 379-81
  2. Military Consultations, vol. 288 (A) (1-10-1801) p p 6864-66.
  3. Ibid p p. 6868
  4. Ibid. 6864-64