பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



12

கும்பெனியாரது கொடுமைகள்

யிரத்து எண்ணுாற்று ஒன்றாவது ஆண்டு அக்டோபர் திங்கள் முதல் நாள் உதயம்.

வைகறை இருளில் நீராடிய காளையார்கோவில் கோட்டைப் பகுதி இன்னும் செம்மையாகப் புலப்படவில்லை. மறவர் சீமை வழக்கில் சொல்ல வேண்டும் என்றால் “நிலம் தெளிய” இன்னும் ஒரு நாழிகை நேரம் இருக்கும். கதிரவனின் காலைக் கதிர், கோட்டையைச் சூழ்ந்து நின்ற மரங்களையும் நெருக்கமான செடி கொடிகளையும் தொட்டுத் தொடரவில்லை. என்றாலும், கோட்டையின் கிழக்கு, மேற்கு, தெற்கு பகுதிகளை நோக்கி பரங்கியரும் அவரது கூலிப்படைகளும் அணிவகுத்து வருவது, அவர்களது நடமாட்ட ஆரவாரத்தில் இருந்து தெரிந்தது. தெற்குப் பகுதி அணிக்கு மக்காலே, மேற்குப் பகுதியில் இன்னிங்ஸ், அக்கினியூ கிழக்குப்பகுதியில் பிளாக்பர்ன் தலைமையில் அந்த அணிகள், சிறிதுநேரத்தில் வடக்கே இருந்து துரோகி வழிகாட்டிய இரகசிய காட்டுப்பாதை வழியாக ஷெப்பர்டும், ஸ்பிரேயும் தங்கள் அணியுடன் வந்து சேர்ந்தனர்.

புதுக்கோட்டைத் தொண்டமானும், அக்கினியூவும், ஒய்யாத் தேவரும் தயாரித்த கூட்டுத் திட்டம், கிளர்ச்சிக்காரர்கள் வியப்படையும் வகையில் கோட்டையை நான்கு புறமும் சூழ்ந்து மடக்குவதுடன், அவர்கள் கிழக்கு வடக்குப்பகுதி காடுகளில் ஒளித்து வைத்துள்ள இரகசிய ஆயுதச் சேமிப்புகளில் இருந்து மேலுதவி கிடைக்காமல் தடுப்பது என்பதுதான்.

சுமார் ஒருமைல் சுற்றளவு உள்ள காளையார்கோவில் மதில்களைச்சுற்றி வளைத்து அணி வகுத்து நின்றனர். பரங்கியரும் அவர்களது எடுபிடிகளும், கிழக்கே அமைந்து இருந்த கோட்டை வாசலிலும். கோட்டையின் பத்து கொத்தளங்களிலும் போருக்கு