பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிப்புரை

வாழ்க்கை வசதிகளையும், உடைமைகளையும் உதறி எறிந்து விட்டு, நமது நாட்டு விடுதலை இயக்கங்களில் தங்களை வீறுடன் ஒன்றிணைத்துக் கொண்டவர் பலர். ஆதிக்கவாதிகளது அடக்குமுறைக்கு ஆளாகி, அணு அணுவாக சித்திரவதை செய்யப்பட்டு அழிந்து பட்டவர் இன்னும் பலர். இவர்களைத் தொடர்ந்து ஏகாதிபத்திய ஆயுத பலத்தை நேருக்கு நேர் சந்தித்து அஞ்சாது போராடி. வெற்றி பெறாவிட்டாலும், வீரமரணம் அடைந்தவர் ஏராளம் ஏராளம்.

பிறந்த மண்ணின் மீது அவர்கள் கொண்டிருந்த பற்றும் பாசமும் அவர்களது எண்ணரிய தியாகங்களும் இந்திய நாட்டின் இழந்த விடுதலையை ஈட்டித் தந்துள்ளது. இருபதாவது நூற்றாண்டை விரைவாக கடந்து முன்னேற்றம் காணத் துடிக்கும் நாம், நமது முன்னோர்கள் நடந்து வந்த பாதையைத் திரும்பி பார்ப்பதற்கு கூட நாட்டமில்லாதவர்களாய் இருக்கின்றோம். இது நன்றி மறந்த செயல் மட்டுமல்ல; நாட்டுணர்வு இல்லாததுங்கூட.

இந்த சமுதாய குறைபாட்டினைக் களைய, நாட்டிற்கு உழைத்த நல்லவர்களை இனங்காட்டி, நினைவூட்டி, பெருமை சுட்டி அவர்களது தியாக வரலாற்றை இன்றைய தலைமுறையினருககு தெரிவிக்க வேண்டியது தேசிய கடமையாகும்.

அந்த முறையில் முத்துராமலிங்க சேதுபதி மன்னரது தியாக வடிவினை, வரலாற்றுச் சான்றுகளுடன் “விடுதலைப் போரில் சேதுபதி மன்னர்” என வரைந்து, தமிழக அரசின் முதல் பரிசினையும், பாராட்டையும் பெற்று, தமிழக வாசகர்களுக்கு அறிமுகமானவர் இராமநாதபுரம் வரலாற்று ஆய்வாளர் டாக்டர் திரு. எஸ். எம். கமால் அவர்கள்.

அன்னாரது, மற்றொரு ஆய்வுத் திரட்டான “மாவீரர் மருதுபாண்டியர்” என்ற இந்த வீர வரலாற்றுக் காவியத்தை எங்களது முதல் படைப்பாக, நாட்டுப்பற்று மிக்க தமிழக