பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/171

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

152

தற்கு காணிக்கையாகக் கொடுத்த போர் மறவர்களது பிணக் கூறுகளைக் கடந்து பரங்கியர் கோட்டைக்குள் நுழைந்தனர்.

மானத்தின்பேராக, வீரத்தின் பேராக விளங்கிய கானப்பேர் தாழ்ந்தது. வீழ்ந்தது. நீலநிறப் பிண்ணணியில் குறுக்கும் நெருக்குமாக சிவப்பு வெள்ளைக் கோடுகளைக் கொண்ட வெள்ளையரது வெற்றிக் கொடி, அந்தக் கோட்டை வாசலின் முகப்பில் தொங்கவிடப்பட்டது. மற்றுமொரு கொடி, மருது சேர்வைக்காரர்கள் மிகுந்த பக்திப்பெருக்குடன் நிர்மாணித்த காளை நாதர் கோவிலின் உயர்ந்த கோபுர மாடத்தில் இருந்து பறக்கவிடப்பட்டது. அந்நியரது ஆதிக்க வெறிக்கு முட்டுக்கட்டையாக விளங்கிய அந்தக் கோட்டை, அப்பொழுது மிகப் பெரிய இடுநாடாக விளங்கியது. கோயிலைச் சுற்றியுள்ள விசாலமான வெளியில், சிவகங்கைச்சீமையின் சிறப்பையும் பெருமையும் சிந்தித்து செயல்பட்ட வீரர்களில் சடலங்கள் குவியல், குவியலாகக் கிடந்தன. பரங்கியரைப்பிடித்துக் கொன்று தங்களது விடுதலை உணர்வை தணித்துக் கொள்ளத் துடிதுடித்த நூற்றுக்கணக்கான போராளிகளது கால்களும் கரங்களும் துண்டிக்கப்பட்டு சிதறிக்கிடந்தன. எங்கு பார்த்தாலும் பின்னம்பட்ட விக்கிரங்களைப் போன்று வீரர்கனது சடலங்கள்; வேதனைக் குரல்கள் கோவிலின் தென்புரத்தில் மருதுசேர்வைக்காரர்கள் ஆழமாக அமைத்த ஆனைமடு குளத்தின் தெள்ளிய நீர் மறவர்கள் சிந்திய செங்குருதி கலந்து செந்நீராகக் காட்சியளித்தது. இத்தகைய சஞ்சலமான சூழ்நிலைக்கு நடுவில், இன்னும் மறைந்து விடாது எஞ்சி இருக்கும் மான உணர்வினுக்கு மவுன சாட்சியாக கோயிலின் முகப்பு கோபுரங்கள் கம்பீரமாக நின்று காட்சியளித்தன.

கோட்டையின் மேற்குப்பகுதியில் எஞ்சி இருந்த வீரர்களும் அவர்களது தலைவர்களான மருது சேர்வைக்காரர்களும் சுரங்க வழியைத் தொடர்ந்து சென்று கோட்டைக்கு தெற்கே வெளியே போய் வடக்கே திரும்பி மேப்பலபனங்குடி காட்டுப்பகுதிக்குள் நுழைந்து விட்டனர். கோட்டை முழுவதும் அவர்களைத் தேடிக் களைத்துப்போன கும்பெனி சிப்பாய்கள், அயர்வு தீருவதற்காக பல நூறு சாராயக்குப்பிகளை குடித்துக் கும்மாளமிட்டனர்.[1] இந்-


  1. 2 .Military Consultations, vo1. 288 A. (4-10-1801) pp.6868-70