பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/172

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

153

தப் போரின் பிரதிபலிப்புகள் - பக்கத்து நாடுகளில், ஒருவேளை மோசமான - கும்பெனியாருக்கு விரோதமான-விளைவுகளை ஏற்படுத்தலாம் என்ற அச்சத்தினால் அவைகளைச் சமாளிப்பதற்கு கர்னல் மில்லர் பரமக்குடிக்கும், கர்னல் ஷெப்பர்டு மங்கலத்திற்கும், கர்னல் இன்னிங்ஸ் பள்ளி மடத்திற்கும், தற்காப்பு அணிகளுடன் விரைவாக அனுப்பப்பட்டனர்.

மேலும் காளையார் கோவில் கோட்டைக்கு உள்ளும், வெளியிலும் கிளர்ச்சிக்காரர்கள் சேர்த்து வைத்து இருந்த ஆயுத இருப்புக்களைத் தேடிப்பிடித்து அழித்தனர். கோட்டை முகப்பில் பதினான்கு ஆயிரம் துப்பாக்கி தோட்டாக்களும், என்பது பீரங்கி வண்டிகளும், இருபத்து மூன்று பீரங்கிகளும் (இரும்பு வெங்கலக் கலவையில் உருவாக்கப்பட்டவை) அறுநூறு பவுண்டு நாட்டு வெடி குண்டுகளும், ஐநூறு பவுண்டு கருமருந்தும், இன்னும் பல விதமான சிறுசிறு போர்க்கருவிகளும் கைப்பற்றப்பட்டதாக அக்கினியூவின் அறிக்கையில் இருந்து தெரிகிறது.[1] இன்னொரு அறிக்கையில் போருக்குப் பின்னர் ஏற்பட்டு உள்ள நிலைமையினையும் கும்பெனி கவர்னருக்கு அக்கினியூ தெரிவித்தான். அதில் சிவகங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள குடிமக்கள் கும்பெனியாரின் அதிகாரத்தை ஏற்று கட்டுப்பட்டுள்ளனர் என்றும் அதுவரை சிவகங்கை சேர்வைக்காரர்களை ஆதரித்து வந்த பெரும்பாலான மக்கள் பகுதியினர் அவர்களது தலைமையிலான நம்பிக்கையை இழந்து சிதறி ஓடிவிட்டனர் என்றும் தெரிவித்து இருந்தான். அத்துடன் தமது துருப்புக்கள் பின் தொடருவதைத் தவிர்ப்பதற்காக பத்திரமான மறைவிடங்களில் பதுங்கி இருப்பதுதான் அவர்களது தற்பொழுதைய திட்டம் என்பதையும் குறிப்பிட்டு இருந்தான்.

இராமநாதபுரம் பகுதிக்கு தப்பிச் சென்ற மயிலப்பன் சேர்வைக்காரரையும், இராமநாதபுரம் சீமை மன்னராக அறிவிக்கப்பட்ட மீனங்குடி முத்துக்கருப்பத்தேவரையும் பிடிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.[2] அவர்கள் இருவரையும், உயிருடனோ அல்லது பிணமாகவோ கொண்டு வருவதற்-


  1. 3. Ibid (5-10-1801) p. 6889.
  2. 4. Military Consultations vol. 288 (6-10-1801), p. 6883-84.