பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/173

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

154

கான சன்மானங்களும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தன.[1] மறவர் சீமைக்கிளர்ச்சிகளில் எஞ்சியிருந்த மாபெரும் தலைவர்கள் இவர்கள் இருவரும் தான்.

காளையார்கோவில் கோட்டைப் போரில் கிளர்ச்சிக்காரர்களை படுதோல்வியடையச் செய்ததுடன் அக்கினியூ திருப்தி அடையவில்லை. கிளர்ச்சித்தலைவர்களைப் பிடிப்பதிலும், கிளர்ச்சிக்கு ஆதரவு அளித்தவர்களை ஒடுக்குவதிலும் நடவடிக்கை மேற்கொண்டான். உடனே, உரளிக்கோட்டை வழியாக சருகணிக்கு விரைந்து செல்லுமாறும் அந்தப்பகுதிக்கான பாதை முட்செடிகள் சூழ்ந்து இருப்பதால் அதனை சுற்றுப்பாதையில் சென்று அடைய வேண்டும் என்றும் அந்தப்பகுதியில் உள்ள கிளர்ச்சிக்காரர்களையும் அவர்களது சொத்துக்களையும் தயக்கமின்றி அழித்து ஒழிக்குமாறும் தளபதி இன்னிங்ஸிக்கு உத்தரவிட்டான். காட்டுச்சண்டையில் நன்கு பழக்கப்படட மலாய் நாட்டுத் துருப்புகளும் இன்னிங்ஸுடன் அங்கு சென்றன. ஏற்கனவே சருகணிப் பகுதியில் இராமநாதபுரத்தில் இருந்த கேப்டன் பிளாக், அங்கு முகாம் செய்து கிராம மணியக்காரர்களையும் மற்றவர்களையும் துருவித்துருவி விசாரித்துக் கொண்டு இருந்தான், அந்தப்பகுதியில் உள்ள கிளர்ச்சிக்காரர்கள் யார், எத்தனைபேர், அவர்களது நிலைமை ஆகிய விவரங்களைத் தெரிந்து கொள்வதற்காக.[2]

மேஜர் ஷா என்ற இன்னொரு தளபதி தெற்குப்பகுதியில் மங்கலத்திற்கு அருகாமையில் கிளர்ச்சிக்காரர்களைத் தேடிப் பிடிப்பதில் முனைந்து இருந்தான். இந்த, வெள்ளைத்தளபதிகள் மூவரும் அவர்களது அணிகளும், அந்தந்தப் பகுதியில் உள்ள கிளர்ச்சிக்காரர்கள் அவர்களது ஆயுதங்கள், சொத்துக்கள் ஆகியவைகளை அழித்து அமைதியை நிலைநாட்ட வேண்டும்; அந்தப் பகுதிகளில் தொடர்ந்து முனைப்பாக இயங்கி வந்த நன்னி சேர்வைக்காரர் என்ற கிளர்ச்சித் தலைவரை உயிருடன் பிடிக்க வேண்டும்; இந்த இருவிதமான பணிகளை முடித்துக் கொண்டு இந்த அணிகள் வடக்கு நோக்கிச்சென்று சங்கரப்பதி, கண்டிர மாணிக்கம் காடுகளையும் திருப்பத்துார் - பிரான்மலைப்பகுதிகளை


  1. 5. Revenue Sundries vol. 26, (17–10. 1801)
  2. 6.Secret Consultations, vol. 26, (2-10-1801) pp. 313-14.