பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

158

புச் சுவடுகளை கவனித்து, அவைகளைத் தொடர்ந்து சென்றனர். கிளர்ச்சிக்காரர்களது பாசறை கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு நடந்த கைகலப்பில் வெள்ளைமருது சேர்வைக்காரரது இரு மக்களையும் இன்னும் சிலரையும் மேஜர். ஷெப்பர்டின் அணி மடக்கிப் பிடித்தது. அந்த இடத்திற்கு அருகிலேயே தங்கி இருந்த மருது சேர்வைக்காரர்கள் கைகலப்பின் பொழுது நழுவிச் சென்றனர்.[1] தங்களது பெற்றோர்களைத் தப்புவிக்கும் நோக்கத்தில் வேண்டுமென்றே அகப்பட்டுக் கொண்ட இளம் வீரர்களான வெள்ளைமருது மக்கள் கறுத்த தம்பியும் மோலிக்குட்டித்தம்பியும் அன்றே அங்கேயே தூக்கில் இடப்பட்டனர்.[2]

அடுத்து இரண்டு நாட்களில் சிவகங்கை மன்னர் வேங்கன் பெரிய உடையாத்தேவரையும், குதிரைகள் பல்லக்குகள், சிலவற்றையும் அந்தக்காட்டில் கைப்பற்றினர். [3] அக்கினியூ அவரை விசாரித்தான். அவருக்கும் மருது சேர்வைக்காரர்களுக்கு உள்ள அரசியல் தொடர்புகளை அறிந்து கொள்வதற்காக, மருது சேர்வைக்காரர்களது அரசியலில் தமக்கென எவ்வித அதிகாரமும் இல்லாமல் பெயரளவில் தான், சிவகங்கைச்சீமை மன்னராக இருந்து வந்ததாக அவர் தெரிவித்தார். தற்சமயம் தாமே சரணடைய முன் வந்தபொழுது, பிடிக்கப் பட்டதாகவும் அவர் தெரிவித்தார். மருது சேர்வைக்காரரது அமைச்சர் போல விளங்கிய கோட்டை சேர்வைக்காரனும் சின்னணண் சேர்வைக்காரனும் ஏற்கனவே கும்பெனியாரிடம் சரணடைந்து இருந்தனர். கும்பெனி யாருக்கு எதிரான நடவடிக்கைகளில் தாங்கள் ஈடுபடவில்லை என்பதை உறுதியாகத் தெரிவித்து தங்களது உயிர்களுக்கு அவர்கள் உத்திரவாதம் பெற்றனர்.[4]

மருது சேர்வைக்காரர்களைத் தேடும் பணி தொடர்ந்தது. கர்னல் வில்லியம் பிளாக்பர்ன், தமது கூலிப்பட்டாளத்துடன் காளையார்கோவிலுக்கு வடகிழக்கே இருந்த காட்டுப்பகுதியை


  1. 12. Military Consultations, vol. 288 (A) (6-10-1801) p. 6877-80.
  2. 13. Renvenue Sundries, vol. 26 (6-10-1801) p. 76.
  3. 14. Military Consultations, vol. 288 (A) (6-10-1801) p, 6881.
  4. 15. Ibid pp. 6882-85.