பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

160


நாட்டுக்குழைத்த நல்லவர்களது தியாகப்பட்டியல் தொடர்ந்தது. கிளர்ச்சித் தலைவர்களில் ஒருவரான சிவகங்கை திருக்கண்ணத் தேவரையும் அவரது கூட்டாளிகளையும் மிகவும் சிரமப்பட்டு பிடித்துக் கொன்றனர்.[1]பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரரான சாமி நாயக்கரும், ஊமை குமாரசாமி நாயக்கரும் இன்னும் அவர்களது அறுபத்து ஐந்து தோழர்களும் திண்டுக்கல் சீமையிலிருந்து பாஞ்சாலங்குறிச்சிக்குத் திரும்பும் வழியில் வத்தலக்குண்டில் பரங்கியர் கைகளில் அகப்பட்டனர்.[2]பரங்கிகள் தடயனிலும் அவர்களை பாஞ்சாலங்குறிச்சி கோட்டை வெளியில் வைத்து 16-11-1801 யன்று சிரச்சேதம் செய்து கொன்றனர். இராமநாதபுரம் சீமைப் பட்டத்திற்கு உரிமை கொண்டாடிய மீனங்குடி முத்துக்கருப்பத் தேவரது தம்பி கனகசபாபதி தேவரை அவரது போராட்டக்களமான அபிராமத்தில் தூக்கில் ஏற்றினர்.[3]அடுத்தடுத்து. இத்தகைய முக்கியத்தலைவர்களைப் பிடித்துக் கொன்றவுடன், பரங்கிகளது மகிழ்ச்சி பன்மடங்காகியது. ஏனைய கிளர்ச்சிக்காரர்களையும் அவர்கள் ஒப்பற்ற தலைவரான மருது சேர்வைக்காரர்களையும் விரைவில் பிடித்து விடலாம் என்ற நம்பிக்கை அவர்களுக்கு அதிகரித்தது. துரோகிகள் பலவாறு துப்புகள் சேகரித்தனர். கைக் கூலிகள் புதிய ஜமீன்தாரது ஆதரவையும் பரங்கிகளது பரிசுத் தொகையும் பெறுவதற்காக, தங்கள் முயற்சியில் இரவு பகலாக அலைந்தனர். அவர்களுடைய முயற்சி வெற்றியும் பெற்றது.

சிவகங்கைச் சீமையை ஒட்டி இருந்த மேலுர் நத்தம் நாடு கும்பெனியாரின் கொலைவெறி தலைவிரித்து ஆடியது. மதுரையில் இருந்த கேப்டன் பெரும் ராணுவ தளவாடங்களுடன் திண்டுக்கல்லுக்கு செல்லுமாறு உத்திரவிடப்பட்டது.[4] காரணம், திருப்பத்துார் பகுதியில் இருந்த பாஞ்சாலங்குறிச்சி, விருபாட்சி பாளையக்காரர்களும் அவர்களுடைய ஆதரவாளர்களுமாக ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் துவரங்குறிச்சி, வலம்பட்டி வழியாக


  1. 19 . Madurai District Records vol. 1219.
  2. 20.Military Consultations, vol. 288. (27-10-1801), p. 7108.
  3. 21 . Ibid. 289, (16-11-1801) p. 7741.
  4. 22 Revenue Sundries, vol. 26, (12-10-1801) p. 361.