பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

161

நத்தத்தை ஊடுருவிச் சென்றனர்.[1] இதனையடுத்து கிளர்ச்சிக்காரர்களும் கும்பெனிப்படைகளும் நத்தம் குன்றுப் பகுதியில் கைகலந்ததில் கிளர்ச்சிக்காரர் தரப்பில் ஏராளமான இழப்பு ஏற்பட்டது. எஞ்சியவர்கள் காமாச்சிநாயக்கன் பாளையம் வழியாகப் பின் வாங்கினர்.[2] கும்பெனிப்படைகள் நத்தம், சேடபட்டி, கீழவளவு, சும்மணப்பட்டி, தட்டப்பட்டி ஆகிய ஊர்களில் போராட்டம் நடத்தினர். கள்ளர் தலைவர்கள் நால்வரையும் கீழவளவு சும்மணப்பட்டி அம்பலக்காரர்களது நெருங்கிய உறவினர்கள் சிலரையும் கைது செய்து மதுரைக்கோட்டையில் சிறையிலிட தளபதி காரோனிடம் அனுப்பி வைத்தனர்.[3] குடிமக்களை இழிவு படுத்தினர். அவர்களது சொத்துக்களை நாசம் செய்தனர். கிளர்ச்சிக் காரர்களைப் பற்றிய விபரங்களைப் பெறுவதற்காகப் போராட்டம் நடத்தினர். கிராம மக்கள் அனைவரையும் பாகுபாடு இன்றி படாதபாடு படுத்தினர்.

ஒருவகையாக நத்தம் தாசில்தாரைக் கொலை செய்து கும்பெனியாருக்குப் பல வழிகளிலும் இடைஞ்சல் செய்த நத்தம் கோபால மணியக்காரரையும், வெங்கிடாசலத்தையும் பிடித்து நத்தத்தில் தூக்கில் போட்டனர்.[4] சேடபட்டி அம்பலக்காரருக்கும் அவரது வீரப்புதல்வருக்கும் 1 - 11 - 1801ம் தேதி அதே "பரிசு" கொடுக்கப்பட்டது. அவைகளை வழங்கியவன் கேப்டன் காட்பிரே. இன்னொரு வெள்ளைத் தளபதியான வெர்னான், கள்ளர் தலைவர் சேதுபதியை சும்மணப்பட்டியில் தூக்கிலிட்டான். [5]அந்த வீரத்தலைவரது சடலத்தை நல்அடக்கம் செய்வதற்கு கூட அனுமதி அளிக்கவில்லை.[6] எதிரிகளுக்குத் தங்கள் எத்தகைய அரக்கமனம் படைத்தவர்கள் என்பதை நினைவுபடுத்த அவன் எண்ணினான். காற்றிலே மெதுவாக ஆடி அலைந்து கொண்டிருந்த அந்தச் சடலம் வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கும் ஒருநாள்


  1. 23 Ibid (9-10-1801 ) p. 351-53.
  2. 24 Public Sundries vol. 136 (B) (19-10-1801) pp. 98-99.
  3. 25 Revenue Sundries vol. 26, (17-10-1801) p. 94-95.
  4. 26 Ibid, (2-11–1801) p. 946.
  5. 27. Public Sundrics, vol. 136 (B) (2-11-1801) p 119.
  6. 28 Revenue Sundries, vol. 26. (6 - 11 - 1801) p. 961