பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

162

அந்த நிலை வருமென்பதை நினைவூட்டிக் கொண்டு இருந்தது. அதே அரக்கன், கிளர்ச்சிகளில் ஒத்துழைப்பு நல்கியதற்காக ஆண்டன் என்ற குடிமகனை கீழவளவில், கிராம மக்கள் முன்னிலையில் நிறுத்தி வைத்து ஆயிரம் கசையடிகள் கொடுத்தான். அப்பொழுது ஆண்டன் இறந்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதும் அவனுக்கு மேலிடம் வழங்கிய உத்திரவு[1] ஆண்டன் மீது அனுதாபம் காரணமாக அல்ல இந்த உத்திரவு. அந்த வீரமறவன் சாவதற்குள்ளாக அவர்களது ஆணையை நிறைவேற்றிவிட வேண்டும் என்ற அரக்கத்தனமான எண்ணம்.

அக்டோபர் 19ம் தேதி 1801. சோழபுரத்திற்கும் ஒக்கூருக்கும் இடைப்பட்ட காட்டில் பெரியமருது தனியாக தங்கி இருப்பதை கும்பெனி கைக்கூலிகள் கண்டுபிடித்தனர். உடனே, அங்கே சென்ற பரங்கி அணி, நிராயுதபாணியாக இருந்த அவரை எதிர்பாராத விதமாகத் தாக்கிக்கைது செய்தது.[2] அதே பகுதியில் மற்றோர் இடத்தில் தங்கி இருந்த சின்னமருது சேர்வைக்காரரையும் கண்டுபிடித்தனர். அவரிடம் ஆயுதம் எதுவும் இல்லாத பொழுதும் அவரை நெருங்குவதற்கு அஞ்சினர். ஆதலால் தொலைவில் இருந்து துப்பாக்கியால் சுட்டனர். அந்தச் சிறிய அணியினருடன் மோதினாலும் அவரால் தொடர்ந்து சண்டை இட முடியவில்லை. காரணம் அவரது தொடையில் குண்டு பாய்ந்து வேதனையால் துடித்தார். அந்தச்சமயத்தில் கும்பெனிக் கூலிகள் அவரைச் சங்கிலியால் பிணைத்து சோழபுரம் பாசறைக்கு இழுத்துச் சென்றனர். அங்கு இரண்டு தலைவர்களையும் பலத்த பாதுகாப்பில் நான்கு நாட்கள் வைத்து இருந்தனர். அவர்களது பெண்டுகளையும் கைப்பற்றி, புதிய ஜமீன்தாரது பொறுப்பில் வைத்தனர்.[3]

அதே நேரத்தில், மருது சேர்வைக்காரர்களது கிளர்ச்சியில் முக்கிய பணியாற்றிய வாராப்பூர் பாளையக்காரர் பொம்மையா நாயக்கரையும் பிடித்து அடைத்தனர். அவரது பாளையம், சிவகங்கைச் சீமையின் வடகிழக்கே, பிரான்மலையை ஒட்டி மதுரை,


  1. 29. Ibid. p. 962.
  2. 30 Military Consultations vol. 289 (21-10-1801,)pp. 7671-75.
  3. 31.Ibid (27-10-1801) p. 7680.