பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

163

திண்டுக்கல் சீமைகளைத் தொட்டவாறு அமைந்து இருந்தது. இந்தப் பாளையம் முன்னர் இராமநாதபுரம் ரகுநாத சேதுபதி மன்னர் காலத்தில் மறவர் சீமையில் சோக்கப்பட்டு சேதுபதியின் பாளையமாக இருந்தது. சிவகங்கைச்சிமை பிரிந்த பிறகு, யாருக்கும் கட்டுப்படாத பாளையமாக இருந்தது.

ஆனால் சின்னமருது சேர்வைக்காரரது நெருங்கிய நண்பராக விளங்கிய அவர், எல்லா வழிகளிலும், சிவகங்கைசீமைக் கிளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தார். மருது சேர்வைக்காரர்களது மற்றொரு நண்பரான மீனங்குடி முத்துக்கருப்பத்தேவரையும் சாயல்குடி காட்டில் கர்னல் மில்லரது அடியாட்கள் கைது செய்தனர்.[1]இராமநாதபுரம் சேதுபதி மன்னரை கி. பி. 1795 ல் பதவி நீக்கி சிறையில் அடைத்த பிறகு, இராமநாதபுரம் சீமைக்கு இவர் உரிமை கொண்டாடி, பரங்கிகளுக்கு எதிராக பாண்டிக்குடியில், 'இராமநாதபுர அரசு' நடத்திய அவரை இராமநாதபுரம் சீமைக்கிளர்ச்சிகளில் தலைமை தாங்கிய அந்தத் தளபதியைப் பலமான இரும்புச் சங்கிலியால் இணைத்துப் பிணைத்து இராமநாதபுரம் கோட்டையில் சிறைவைத்தனர். அவருடன் அவரது மனைவியார் (2), அவரது தம்பி கனகசபாபதியின் விதவை (1) அவரது தாயார் (1), அத்தை (1), குழந்தைகள் (4), தங்கையும் ஆக குடும்பத்தினர் (5), மற்றும் பணியாட்கள் (10), ஆக மொத்தம் இருபத்தாறுபேர் அவருடன் சிறை வைக்கப் பட்டனர்.[2]

மற்றும், சின்னமருது சேர்வைக்காரரது கடைசி மகனான பதினைந்தே வயதே நிரம்பப்பெற்ற துரைச்சாமியை மேலுரை அடுத்த கிராமத்தில் கைதுசெய்து துத்துக்குடி ராணுவ முகாமிற்கு அனுப்பி வைத்தனர்.[3] இத்துடன் மறவர் சீமையின் கிளர்ச்சிகளைத் தங்கள் வாழ்க்கையின் இலட்சியமாகக் கருதி, இரவு பகல் என்றும் பாராது துன்பம் துயரம் ஆகியவைகளைப் புறக்கணித்து


  1. 32. Madurai Disrict Records vol. 1133 (29-10-1801) p. 284,
  2. 33 .Ibid. 1146 (24-10-1801) p. 23.
  3. 34.Military Consultations, vol, 289 (27-10-1801) р. 7080.