பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

167

கொண்டு இருந்த கும்பெனியரின் ஏகாதிபத்திய கனவை கலைத்தனர். கோழைகள் வாழ்வதில்லை; வீரர்கள் வாழ்கின்றனர், முடிவின் தன்மையைப் பற்றிச் சிந்திக்காமல் செயல்பட்டனர். வலு இழந்த நிலையில் தியாகிகள் ஆயினர். அந்தத் தியாகிகளை சாதி, சமய வேறுபாட்டு வேலிகள் சூழ்ந்து இருக்கவில்லை. மாறாக, அவர்களின் உருக்குபோல இறுக்கமாக அணைக்கும் ஒற்றுமை, உயிர்மூச்சாக இயங்கியது. நாட்டுப்பற்று, அவர்களது நெடிய கண்ணோட்டமாகக் காட்சி அளித்தது. காலம் காலமாக, உயர்ந்து நின்ற மறவர் சீமையின் மாண்பை, விழுப்புண் கொண்ட வீரத்தை வீறு கொண்டு, காத்து வளர்க்க வேண்டும் என்ற கவலையும் அக்கரையும் அவர்களிடம் மிகுந்து இருந்தன.

இவைகளுக்குக் குந்தகம் விளைவித்து வந்த அன்னிய ஆதிக்கத்துடன் அலைகடல் போல ஆயுதப் போராட்டங்களில் மோதினர். பதவி மட்டும் போதும் என்ற மனநிறைவில், கொள்ளையராக வெள்ளையரின் கால்நிழலில், காலமெல்லாம் காத்து நிற்கத் தயார் என ஓடிவந்த படைமாத்துார் ஒய்யாத்தேவரைப் போன்று இந்த வீரர்களும், தியாகிகளும் விரும்பி இருந்தால், இந்தப் பரந்த பாரத நாட்டில் வெள்ளையரின் ஆதிக்கம் எப்பொழுதோ எளிதாக முழுதுமாக ஏற்பட்டு இருக்கும். விலை மதிக்க முடியாத காலமும், ஈடு செய்ய முடியாத மக்களது உயிரும் உடமைகளும் விணாகி இருக்காது. ஆனால் மக்களது நலனையே எண்ணிவந்த அந்தத் தலைவர்களின் சிந்தனை அந்தத் திக்கிலே செயல்பட வில்லை அவ்விதம் அவர்கள்.செய்திருந்தால் வரலாறு அவர்களைக் கோழைகள், குறுமதி கொண்ட கொடியவர் என்றல்லவா குறித்து வைத்து இருக்கும். அத்தகைய இழிவு ஏற்படாத வண்ணம், வாழ வேண்டும், மக்கள் புகழ ஆளவேண்டும் என்ற அவாவினால் சிவகங்கைச் சேர்வைக்காரர்கள், அன்றைய தென்னகத்து புரட்சித் தலைவர்களுடன் தோள் சேர்த்து நின்றனர். அன்னிய ஆதிக்கத்தை நாட்டை விட்டு அகற்ற வேண்டும் என்ற அவர்களது குறிக்கோளின் வெற்றிக்காக அனைத்து உதவிகளையும் வழங்கி வந்தனர்.

அந்தப் புதிய பாதையில், நண்பர்களாக நடித்த நயவஞ்சகப் பரங்கியரின் ஆதிக்க வெறியை, போராடிக் களைய வேண்டும் வன்ற மன உறுதிக்கு மகாராஷ்டிர மாநிலத்து தூந்தியாவின் துணையும், இராமநாதபுரம் முத்துராமலிங்க சேதுபதி மன்னரது