பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

{{|169}}

விடும்[1] பேராண்மை படைத்த சின்னமருது, சேர்வைக்காரருக்கும் மரணதண்டனை.

மருது சேர்வைக்காரர்கள் என்றாலே வெள்ளைப்பரங்கிகள் மனம் ஒடுங்கி, திகில் அடைந்து, வெகுண்டு ஓடியது ஒருகாலம். அப்பொழுது பரங்கிகள் மக்களுக்கு எதிராகத் தனித்து நின்றனர். ஆனால் இப்பொழுது நிலைமை மாறிவிட்டது. அணியிலும் இந்த மண்ணில் தோன்றிய துரோகிகளும் அவர்களது தொங்கு சதைகளான மக்களது ஒரு பகுதியும், அவர்களுடன் சேர்ந்து நின்றனர். மாபாரதப் போரில் அநீதியின் உருவான துரியோதனது அணியில் தானே துரோணரும், பீஷ்மரும், கர்ணனும் இருந்தனர். நியாயம் அவர்கள் கண்ணைக் குருடாக்கிவிட்டு இருந்ததல்லவா!

சிவகங்கை அரண்மனைச் சேவகத்தில் சிறிய சில்லரைப் பணிகளில் தங்களது வாழ்க்கையைத் துவக்கிய மருதுசகோதரர்கள். சிவகங்கை மன்னரது அந்தரங்கப் பணியாளர் பதவிக்கு உயர்ந்தனர். ஆர்க்காடு நவாப்பின் படைகளை சிவகங்கை மண்ணில் இருந்து விரட்டியடித்த வீரப்பணிக்காக அவர்கள் பிரதானிகள் என்ற பெரும் பணிக்கு நியமிக்கப்பட்டனர். சிவகங்கை அரசுத் தலைவர். அப்பொழுது பெண்ணாக விதவையாக இருந்த காரணத்தினால், ஆட்சிப்பொறுப்பையும் அதிகாரத்தையும் சற்று அதிகமாகவே பகிர்ந்துகொண்டனர். அதனால் அண்டை நாடான இராமநாதபுரம் சீமையின் சேதுபதி மன்னரது வெறுப்பிற்கும் விரோதத்திற்கும் ஆளாகி, வீண்தொல்லைகள் வளருவதற்கு வழி கோலினர். அவர்களது தந்தை மொக்கைப்பழனி சேர்வைக்காரரை இராமநாதபுரம் அரசுப்பணியில் அமர்த்திக் காத்து வந்தவர் இராமநாதபுரம் மன்னர் என்பது மட்டுமல்லாமல், இராமநாதபுரம் சிவகங்கைச் சீமைகளில் உள்ள கள்ளர், மறவர், அகம்படியர் என்ற முக்குலத்து மக்களின் முதல் குடிமகன் முத்துராமலிங்க சேதுபதி மன்னர் என்ற பெரும் உண்மையைப் புறக்கணித்து, அவரைத் தங்களது ஜென்மப் பகைவராக ஆக்கிக் கொண்டனர். ஆதலால் மறவர் சீமை மக்களது ஆதரவையும் அனுதாபத்தையும் அவர்களால் முழுமையாகப் பெறமுடியவில்லை. இந்த மிகப்பெருந் தவறுகளுக்கு ஈடாக, இராமநாதபுரம் மன்னருக்கு எதிராக மாற்-


  1. Col Welsh: Military Reminiscenes vol II (1848).