பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

துரோகமும் தியாகமும்

சிவகங்கைச் சீமை என்ற சொல், மருது சேர்வைக்காார்களது கடைசி மூச்சில் கலந்து மறைந்து விட்டது. அந்தப்பகுதி. சிவகங்கை ஜமீன் என்றும் படைமாத்துார் ஒய்யாத்தேவர் சிவகங்கைச் சீமையின் மன்னர் என்பதற்குப் பதிலாக சிவகங்கை ஜமீன்தார் என்றும் பரங்கிகளது ஆவணங்களில் குறிக்கப் பெற்றது, மருதுசேர்வைக்காரர்கள் தூக்கிலிடப்பட்டது பற்றி சிவகங்கை ஜமீன்தார் கூட மகிழ்ச்சியடைந்ததாகச் செய்தி இல்லை. ஆனால், அந்தச் செய்தியினால் அளவு கடந்த மகிழ்ச்சியும் ஆறுதலும் அடைந்தவர் பரங்கியரது இந்தப் பராக்கிரமச் செயலுக்கு பல்லவி பாடி, கட்டியங்கூறிய கயவன் ஒருவன் இருந்தான். சிவகங்கைச் சீமையிலோ அல்ல பெரிய மறவர் சீமையான இராமநாதபுரம் சீமையிலோ அல்ல கள்ளர் சீமையில் காலமெல்லாம் கும்பெனியாரது காலடியில் வாலை ஆட்டி வளைந்து வரும் ரெகுநாத தொண்டமான் பகதூர். அவன் அடைந்த அளவில்லா மகிழ்ச்சியை கும்பெனி கவர்னரான ராபர்ட் கிளைவிற்குக் கடிதம் மூலம் எழுதித் தெரிவித்தான்.

கும்பெனியாரது அதிர்ஷ்டவசமாக, காட்டுநாய் சின்ன மருதுவும் அவன் தமையனும், குடும்பத்தினரும், ஒருவகையாக கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ளனர். மேன்மை தங்கிய கும்பெனி அலுவலர்களது தீரமும் செயல் திறனும்தான் இதற்குக் காரணம். தங்களது நம்பிக்கைத் துரோகத்திற்கான பரிசையும் அவர்கள் பெற்றனர். இறப்பை எய்தினர்.

"மகாபிரபுவே! நீண்டகாலமாக உன்னிப்பாகக் கவனித்து வந்து இருக்கிறேன். பிரஞ்சுக்காரர்களும், சந்தாசாகிபும், திப்புவும், கும்பெனியாரது செல்வச்சிறப்பையும் வலிமையையும் சிந்திக்காமல், அவர்களது வீரமிக்க படையணிகளை எதிர்ப்பதற்கு முயன்-