பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

178'

னர். ஆனால், அவர்கள் முழுவதுமாக அழிக்கப்பட்டு விட்டனர். அதே நேரத்தில் கும்பெனியாரது கூட்டாளிகளும், நண்பர்களும் பரிசு பெற்றனர். பாராட்டப்பட்டனர்.

"மருதுவைப்போன்ற மிகவும் மோசமான பிறவி வேறு எதனை எதிர்பார்த்து இருக்க முடியும்? என்னைப் பொறுத்த வரையில் காலமெல்லாம், மேன்மை பொருந்திய கும்பெனியாரது துரைத்தனத்தைத் தொடர்ந்து சார்ந்து இருந்து வந்து இருக்கிறேன்.

"என்னுடைய நிலையையும் நடத்தையையும் எனது மேலான தாயார் கிளைவ் பெருமாட்டியார் முன்னிலையில் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். தளபதி பிளாக்பர்ன் அவர்களது கட்டளைக்கு இணக்கமாக இப்பொழுது முடிவடைந்துள்ள போராட்டம் முழுவதிலும், நான் மிகவும் கூடுதலாக சிரத்தை எடுத்துக் கொண்டு இருந்தேன், என்பது யாவரும் அறிந்த தொன்று.

"ஆதலால் எல்லா வகையிலும் எனக்கு தயவு காட்டப் படவேண்டும் என்பது தான் எனது நம்பிக்கை. தங்களது தாராளம் நீண்டு பெருக வேண்டும் என்று சொல்லிக் கொண்டுள்ளதைத் தவிர வேறு என்ன இருக்கிறது."1

மருதுசேர்வைக்காரர்களை அழித்து மகிழ்ந்த நிலையில் கும்பெனியார், எங்கே இந்த கொத்தடிமையின் சேவையை மறந்து விடுவார்களோ என்ற அச்சம் தொண்டைமானுக்கு! மேலும் அந்த நல்ல தருணத்தை நழுவவிடாமல் சொந்த ஆதாயங்களையும் சாதித்துக் கொள்வது தானே ராஜதந்திரம்! அது மட்டுமல்ல, கும்பெனியாருக்கு உதவக்கூடிய இத்தகைய தருணம் மீண்டும் வாய்க்குமா என்பது சந்தேகம்.

ஏனெனில் சிவகங்கைச்சீமைக் கிளர்ச்சிகளில் நேரடியாக சம்பந்தப்பட்ட அனைத்துப் போராளிகளையும் ஆங்காங்கு தூக்கிலிட்டு விட்டனர். அல்லது கசையடிகள் கொடுத்து, கடலுக்கு அப்பால் கொண்டு சென்றனர். அவர்கள் எங்கே அழைத்துச்


1. Military consultations vol 289, (25-10-1801; p. 7763-64.