பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

181

கப்பலுக்குள் அழைத்துச் செல்லப்பட்டனர்.[1] 11-12-1802 ம் தேதி கப்பல் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து பயணம் தொடங்கியது. கப்பலில் உணவு உண்ணும் போது மட்டும் விடுதலை வீரர்களது கை விலங்குகள் தளர்த்தப்பட்டன. மற்ற நேரங்கள் முழுவதும் கை விலங்குகள் அவர்களுக்கு மிகப்பெரும் இடர்ப்பாடாக இருந்தன. கரைகாணாத கடலுக்கு ஊடே பயணம் செய்யும்போது கூட அவர்கள் தப்பித்துத் தாயகம் திரும்பிவிடக் கூடாது என்ற பயம் கும்பெனியாருக்கு இருந்து வந்தது.

பயணம் தொடர்ந்தது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஆழமான கடல், போராளிகளது கவலைகள் போன்று பரந்த வானம் முழுவதையும் கவிழ்ந்துள்ள மேகத்தின் பயமுறுத்தல். பேரலைகளது ஆவேசம், கப்பலின் பாய்களை அலைக்கழித்துச் செல்லும் காற்றின் சீற்றம் கப்பலைச் சுக்கு நூறாகச் சிதறடிக்க முற்படுவது போன்ற பெரு மழை. பகல் இரவு வந்து போயின. பயணம் தொடர்ந்தது. வழக்கமான ஆறுவார பயணத்திற்காக எடுத்துச் செல்லப்பட்ட அரிசி (5398 படி) பருப்பு (371 படி) நெய் (421 பலம்) உப்பு (210 பலம்) ரொட்டி (5 மூடை) புளி (3375 பலம்) கருப்புக்கட்டி (750 பலம்) கோழி (1,100) செம்மறியாடு (10) மற்றும் குடிநீர் அனைத்தும் காலியாகி விட்டன.[2] பசி, தாகம், பயணக் களைப்பு, விடுதலை வீரர்கள் புழுப்போல் துடித்தனர். என்று முடியும் இந்தப்பயணம் என்று விடியும் இந்த இன்னலின் தொடர்ச்சி, பயணத்தின் பொழுது, கைதிகளில் மூவர்-பாஞ்சாலங் குறிச்சி சின்னப்பிச்சைத்தேவர், ஆதனுார் சுப்பிரமணிய நாயக்கர், விருபாட்சி அப்பா நாயக்கர் ஆகிய மூவரும் கப்பல் தளத்தில் சுருண்டு விழுந்து மடிந்தனர்.[3] அவர்களது சாவு அந்தக்கப்பல் பயணத்தைவிட கொடுமையாக இருந்தது.

ஒரு வகையாக எழுபத்தைந்து நாட்கள் பயணத்துக்குப் பிறகு தொலைவில் பினாங்கு தீவின் மத்தியில் உள்ள குன்றும் அதனை மூடி மறைத்துள்ள தென்னை, பாக்கு மரங்களது பசுமையான காட்சியும், கப்பலில் உள்ளவர் கண்களுக்கு ஆறுதல் அளிப்


  1. Ibid vol. 304, (9-11-1802) p. 7867-68
  2. Ibid vol. 288 (A) (1 1-2-1802) p. 887-89
  3. Military Consultations, vol. 307, (19-1 -1803), p. 1249.