பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

182

பதுபோல் தோன்றின. கப்பல் பினாங் தீவிற்கு சற்று வடக்கே நங்கூரமிடப்பட்டது. கப்பலில் உள்ள கைதிகளைக் கரை இறக்குவதற்கான அனுமதி கோரிய கப்பல் தளபதியின் கடிதத்தை தூதர்கள் தீவின் கவர்னருக்கு எடுத்துச்சென்றனர். அங்குள்ள கார்ன்வாலிஸ் கோட்டைக்குள் இத்துணை கைதிகளையும் பாதுகாப்பாக வைப்பதற்கு இடவசதி இல்லாததால் கோட்டைக்கு வெளியே ஒரு வீட்டை வாடகைக்கு அமர்த்திய பிறகு கைதிகளைக் கரையிறக்கினர்.[1]

இதோ அவர்களது பட்டியல்: [2]


1. வேங்கன் பெரிய உடையாத்தேவர் - சிவகங்கை
2. முத்துவடுகு என்ற துரைசாமி, த/பெ. சின்னமருது
3. சின்ன லக்கையா என்ற பொம்மை நாயக்கர் - வாராப்பூர்
4. ஜெகநாதஐயன் - இராமநாதபுரம்
5. பாண்டியப்பதேவன் - கருமாத்தூர்
6. சடைமாயன், கருமாத்தூர்
7. கோசிசாமித்தேவர், கருமாத்தூர்
8. தளவாய் மாடசாமி நாயக்கர் - பாஞ்சாலங்குறிச்சி
9. குமாரத்தேவன், முள்ளூர்
10. பாண்டியன் - பதியான்புத்தூர்
11. முத்துவீர மணியக்காரர் - ஆணைக்கொல்லம்
12. சாமி - மணக்காடு
13. ராமசாமி
14. எட்டப்பத் தேவர் - நான்குனேரி
15. பாண்டிய நாயக்கர் - கோம்பை
16. மண்டைத் தேவர்
17. மலையேழ்மந்தன்

18. வீரபாண்டிய தேவர்


  1. Ibid, vol. 304, (4-11-1802), p. 7869–70.
  2. Ibid vol. 307, (19-1-1801), (B) p. 1250,
    Ibid vol. 304, [1-10-1802) p. 7867-68.