186
அக்கினியூவின் அந்த ஆலோசனையை கும்பெனித் தலைமை அப்படியே ஏற்றுக் கொண்டது. திருநெல்வேலி, மதுரை இராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல் சீமைகளில் உள்ள அமில்தார்கள், குடிகளிடம் எஞ்சி இருந்த ஆயுதங்களைப் பறித்துக் கைப் பற்றும் பணியில் ஈடுபட்டனர். சிவகங்கைச் சீமையில் இந்தப் பணிக்கு வைகுந்தம் பிள்ளை என்பவரை புதிய சிவகங்கை ஜமீன்தார் நியமனம் செய்து இருந்தார்.[1] பரங்கிகளது திட்டத்தின் வெற்றியைக் குறிப்பதுடன் அந்தச் சீமை மக்கள் மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டத்திற்கு ஆயத்தமான நிலையில் இருந்தனர் என்பதையும் புலப்படுத்துகின்றனர். கீழே கொடுக்கப்பட்டுள்ள புள்ளி விபரங்கள் பரங்கிகளது திட்டத்தின் வெற்றியைக் குறிப்பதுடன் அந்தச் சீமை மக்கள் மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டத்திற்கு ஆயத்தமான நிலையில் இருந்தனர் என்பதையும் புலப் படுத்துகின்றன.
16-1-1802ம் தேதிய அறிக்கையில் கண்டுள்ளபடி[2]
ஆயுத வகை | நெல்லைச் சீமை | சிவகங்கைச் சீமை | இராமநாதபுரம் சீமை | மொத்தம் | |
1. | மஸ்கட் | 1602 | 1050 | 457 | 3109 |
2. | மஸ்ஸில்லோடிங் துப்பாக்கி | 686 | – | 570 | 1256 |
3. | கைத்துப்பாக்கிகள் | 815 | – | 19 | 834 |
4. | வால்பீஸ் | 152 | – | 40 | 192 |
5. | ஜிஞ்சாலி (பீரங்கி) | 3 | – | 6 | 9 |
6. | நீண்ட ஈட்டிகள் | 2300 | – | 1900 | 4200 |
5558 | 1050 | 2992 | 9600 | ||
21-2-1802ம் தேதிய அறிக்கைப்படி | |||||
1. | மஸ்கட் | 2438 | 1639 | 1037 | 5114 |
2. | பீரங்கிகள் | 16 | – | – | 16 |
3. | மாட்ச்லாக் | 979 | 944 | 1584 | 3507 |
4. | கைத்துப்பாக்கி | 126 | 19 | 67 | }
|