பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

188

கருமருந்து போட்டு இடித்துப்பயன்படுத்தும் துப்பாக்கிகளுக்கு ரூபாய் பத்தும், இரட்டைக்குழல் துப்பாக்கிக்கு ரூபாய் நான்கும், வெடிகளுக்கு ரூபாய் ஐந்தும், “அன்பளிப்பாக” வழங்கி ஆயுதங்களைப் பறித்தனர்[1] இதற்காக ரூ. 1, 07, 182-6.0 ஒதுக்கீடு செய்தனர், என்றாலும் 31. 3. 1802 தேதி வரை இந்த வகையில் ரூ 70, 145. 10. 10ம் சிறுகோட்டைகளை இடிப்பதற்கு ரூ. 15,948, 7. 12ம் செலவு செய்யப்பட்டதாக ஆவணங்கள் உள்ளன.[2] இவ்விதம் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள், மதுரை பாளையங்கோட்டை, திண்டுக்கல், இராமநாதபுரம் ஆகிய கோட்டைகளில் அமைக்கப்பட்டு, இருந்த இராணுவப் பிரிவுகளுக்கு அனுப்பப்பட்டு, அங்கு அவைகள் முக்கிய அலுவலர்கள் முன்னிலையில் அழிக்கப்பட்டன.[3] அழிக்கப்பட்ட கோட்டைகளின் முழுப்பட்டியல் கிடைக்கவில்லை. வடக்கே அரவக்குறிச்சி, தாராபுரம் கோட்டைகள் தரைமட்டமாக்கப்பட்டன. [4] மறவர் சீமையில், அனுமந்தக்குடி, ஆறுமுகக்கோட்டை, முஷ்டக்குறிச்சி, முதல்நாடு, பந்தல்குடி, பெருநாழி, பரளச்சி, திருச்சுழி ஆகிய இடங்களில் இருந்த மண்கோட்டைகளும் அழிக்கப்பட்டன. இராமநாதபுரம், பாம்பன், கமுதிக்கோட்டைகளை இடித்து விடுமாறு இராமநாதபுரம் ஜமீந்தாரிணிக்கு ஆணையிடப்பட்டது.[5] நெல்லைச் சீமையில் மட்டும் பிரம்மதேசம், கங்கைகொண்டான், சங்கரநாயனார் கோவில், ஆழ்வார் திருநகரி, களக்காடு பகுதிகளில் இருந்த இருபத்து எட்டுகோட்டைகள் அழிக்கப்பட்டதற்கும். குறிப்பாக பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையை எந்தக்காரணத்தைக் கொண்டும், எப்பொழுதும் யாரும் அதனை மீண்டும் பரங்கியருக்கு எதிராகப் பயன்படுத்தக்கூடாது என்ற நோக்கத்திற்காகவும் அந்தக்கோட்டையின் பாளையக்காரர்களை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காகவும், அந்தக்கோட்டையை இடித்து, கோட்டை இருந்த பகுதியில் எள்ளை விதைத்து எருக்கலைச் செடியை நட்டதற்கும் விவரங்கள் உள்ளன.[6] இந்தக்கோட்


  1. .Ibid 1140 (31-3-1802), p. 196
  2. Idid 1140 (31-3-1802). p. 199
  3. Ibid 1142 (8-1-1803). p. 2
  4. Madurai District Records vol. 1221 p 27-50
  5. Madurai District Records vol. 1146 (1–9-1803) p. 34
  6. Madurai District Records vol. 1140 (28-5-1802) р. 36 & р. 96.