பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

189

டையை இடித்து அழிப்பதற்கு அறுநூறு ஆட்களை நியமித்து இருந்தனர். அரணை அடையாளம் தெரியாதவாறு அழித்துப் போட்டதுடன் அந்தப்பெயரை அலுவலக ஆவணங்களில் இருந்தும் அகற்றினர்.[1]

தமிழக மக்கள் தலை கவிழ்ந்து நடக்கக்கூடிய இத்தகைய இழிசெயல்களை முன் எச்சரிக்கை, பாதுகாப்பு என்ற பெயரில் அவர்கள் மேற்கொண்டாலும், அவர்களை உள்ளுர பயமும் பீதியும் ஆட்டி அலைத்துக் கொண்டிருந்தது என்பதைச் சுட்டும் நிகழ்ச்சியொன்று திருநெல்வேலியில் நடந்தது.[2] நெல்லையப்பருக்கு ஆண்டாண்டாக நடக்கும் ஆனித்திருமஞ்சன விழா. கோயில் திருவிழா என்றால் மக்கள் கூட்டம் இல்லாமலா இருக்கும் ? கலைக்டர் லூஷிங்டனுக்கு உச்சித்தலை முதல் உள்ளங்கால் வரை நடுக்கம் கண்டது. ஆயிரக்கணக்கில் கோயிலில் கூடுகின்ற மக்கள் வெள்ளையர் எதிர்ப்பு உணர்வுடன் நடந்து கொண்டால் ...? கும்பெனியாரது சொத்துக்களைக் கொள்ளையிட்டு கச்சேரியில் அடைக்கப்பட்டிருக்கும் சிறைக் கைதிகளைத் தப்புவிக்கும் முயற்சியில் ஈடுபட்டால் ... அவனது சிந்தனை அவ்விதம் பீதியினால் நடுங்கியது. உடனே பாளையங்கோட்டையில் உள்ள மேஜர் ஷெப்பர்டுக்கு ஓலை அனுப்பினான். திருநெல்வேலியில் திருவிழா நடைபெறும் இரண்டு நாட்களிலும் கும்பெனிச் சிப்பாய்களை நகரின் பல இடங்களில் நிறுத்தி வைத்து பக்தர், பொதுமக்கள் நடமாட்டங்களைக் கண்ணும் கருத்துமாக கவனித்து வருமாறும், சுவாமியின் பவனிமுடிந்தவுடனேயே மக்களைக் கலைந்து செல்லுமாறு செய்யும்படியும், நடவடிக்கை எடுக்க. இப்படி எத்தனை திருவிழாக் கூட்டத்தைக் கண்டு பரங்கிகள் நடுங்கினார்களோ தெரியவில்லை.

இத்தகைய நடவடிக்கைகள், மதுரை, திண்டுக்கல். திருச்சி சீமைகளிலும் மேற்கொள்ளப்பட்டன. வத்தலக்குண்டு, நத்தம் பெரியகுளம், வேடசந்துார், பழநி, தாராபுரம், கரூர், காங்கயம் தாசில்தார்கள் ஏராளமான ஆயுதங்களை குடிகளிடமிருந்து கைப்பற்றியதை அவர்களது அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மேலும் அவர்கள், போடி, கம்பம், அம்மையநாயக்கனூர், தேவதானப்


  1. Madurai District Records vol. 1178 (A) 10-5-1802
  2. Ibid (11-7-1802) p. 56.