பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

190

பட்டி, கன்னிவாடி, பழநி, மருங்காபுரி, வீரமலை, பொள்ளாச்சி ஆயக்குடி, பல்லடம் பாளையக்காரர்கள் வைத்திருந்த, ஆயுதங்களையும் பறித்து மதுரைக் கோட்டைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் தேவானப்பட்டி, கங்குவார்பட்டி, போடி, பழநி ஆகிய ஊர்களில் புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை அடித்து விரட்டக்கூட ஆயுதம் இல்லாமல் அங்குள்ள மக்கள் அவதிப்பட்ட செய்திகளும் உள்ளன.[1]

கும்பெனியாரது பயங்கொள்ளித் தனமான இந்த வெறிச் செயல்கள் கி. பி. 1804 வரை நீடித்தன.[2] அத்துடன் இப்பகுதிகளில் உள்ள இருபத்தைந்து பாளையக்காரர்களிடம், ஆயுதம் தாங்கிப் போரிடக் கூடிய வீரர்கள் எத்தனை பேர் இருந்து வருகின்றனர் (10-300) என்ற புள்ளி விவரங்களையும் சேகரித்தனர்.[3] மேலும் கிளர்ச்சிக்காரர்களது தாக்குதல் ஏற்பட்டால் அதனைச் சமாளிப்பதற்கு என்ன செய்யலாம் என யோசித்தனர். கோவில்களிலும் மடங்களிலும் பணியாற்றும் பிராம்மண சமூகத்தினரையும் திரட்டி, அவர்களுக்கும் போர்ப்பயிற்சி கொடுக்கவேண்டும் எனக் கும்பெனியார் தளபதிக்கு மதுரைச்சீமைத். துணைக் கலெக்டர் காரோ உத்திரவிட்டான்.[4]

சிவகங்கைச் சீமை விடுதலைப் போராட்டத்தை நசுக்கிவிட்ட பொழுதிலும், பரங்கிகள் எந்த அளவிற்கு பயத்தினால் நடுங்கிக் கொண்டு இருந்தனர் என்பதை இந்த உத்திரவுகள் தெரிவிக்கிறது.[5] அவர்களது பீதியை உறுதிப்படுத்தும் வகையில், திண்டுக்கல் சீமை மக்களது ஆவேசம் குறையாமல் இருந்தது. பக்கத்து சீமையான சிவகங்கைச் சீமையும் அதனைப் போராட்டக்களத்தில் நிறுத்திய சிவகங்கை சேர்வைக்காரர்களைப் பரங்கியர் அழித்தபிறகும், அவர்களது எழுச்சி மிக்க உணர்வுகளால் உந்தப்பட்ட கிளர்ச்சிகள், ஓயவில்லை. என்றாலும் அவர்களுக்குள் ஒற்றுமை இல்லை. போராட்டத்தைத் திட்டமிட்டு நடத்தும் உறுதி


  1. Madurai District Records vol. 128, pages 39, 42, 61, 66
  2. Ibid. 1147, 30-10-1804
  3. Ibid. 1146, (27-9-1803,) p. 59
  4. Ibid 26-3-1805, 27-3, 1805
  5. Madurai District Records, vol. 1222, (9–5–1802)