பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

191

யான தலைமை இல்லை. பரங்கியருக்கு ஈடான வெடிமருந்து ஆயுதங்களும் அவர்களிடம் இல்லை. அவர்களது போராட்டமும் கடலில் பெய்த மழையாகப் பயனற்றுப் போயிற்று.

கிளர்ச்சிகளில் தீவிரமாக ஈடுபட்டவர்களை சத்திரப்பட்டியிலும், பழனியிலும் தூக்கில்போட்டு கொன்றனர். விருபாட்சி பாளையக்காரர் லெட்சுமண நாயக்கர், தாசரிப்பட்டி, பொம்மகவுண்டர், பெரியகோட்டை வெள்ளைக்கவுண்டர், பூசாரிப்பட்டி- சந்திரன் சேர்வைக்காரர். பழனி சேர்வைக்காரர் மைத்துனர் வெள்ளையன் சேர்வைக்காரர், சின்னவலையப்பட்டி கட்டையன் சேர்வைக்காரர், காமாட்சிப்பட்டி வயிரவன் சேர்வைக்காரர் ஆகியோர் அந்தத் தியாகிகள்.[1] இவர்களில் லட்சுமண நாயக்கரைத் தவிர்த்து, ஏனைய கிளர்ச்சிக்காரர்கள் அனைவரும் கி.பி. 1801ம் ஆண்டு கிளர்ச்சிக்காகக் கைதுசெய்யப்பட்டு நன்னடத்தை பொறுப்பில் விடுவிக்கப்பட்டனர். என்றாலும், கிளர்ச்சியின் முடிவு உயிர்க் கொல்லியாக இருக்கும் என்று நன்கு உணர்ந்தவர்களாக இருந்தும், ஏகாதிபத்திய எதிர்ப்பு வெறியினால் கும்பெனியாரை அடித்துத் துரத்த வேண்டும் என்ற துணிச்சலான முடிவில் இருந்தார்கள் அவர்கள்.

இந்தத் தண்டனைகளை தாமே நேரில் இருந்து நிறைவேற்றியதாக கலெக்டர் பாரிஷ் மேலிடத்திற்கு அறிக்கை செய்தான்.[2] இன்னும் லெட்சுமண நாயக்கர் மகன் ராம்ராஜ், சிந்தலப்பட்டி நல்லப்ப கவுண்டர், தமச்சான்பட்டி, தண்டு கதிருநாயக்கன், முண்டவண்டி நஞ்சையன் சேர்வைக்காரர் ஆகியவர்களை கும்பெனியார் “கருணையுடன்” ஜென்ம தண்டனை வழங்கி நாடு கடத்தினர். அதில் இந்தக் குற்றவாளிகள் அனைவரும் கிளர்ச்சிக்காரர் லெட்சுமண நாயக்கரது “தீய செயல்களுக்கு”த் துணையாக இருந்திராவிட்டால், தாங்கள் பிறந்த மண்ணில் அவர்கள் அமைதியாக வாழ்ந்து இருக்க முடியும் என்று தமது பச்சாத்தாபத்தையும் தெரிவித்து இருந்தான் பாரிஷ். ஆனால் இத்தகைய கொடுமையாள கோரமான இழிவான சிந்தையினால், செயல்களினால், குமைந்து கொப்பளித்துக் கொண்டிருந்த மக்களின்


  1. Ibid 1 148 (26-3-1805, (27-3-1805)
  2. Madurai District Records vol. 1148 (3–5-1805) р. З8